News May 19, 2024

IPL: ஹைதராபாத் அணி வெற்றி

image

PBKS-க்கு எதிரான ஐபிஎல் போட்டியில், SRH அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய SRH அணி, தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்தது. டிராவிஸ் ஹெட் முதல் பந்தில் ஆட்டமிழந்தாலும், அபிஷேக் (66), க்ளாஸன் (42) பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றி பெற செய்தனர். இதன் மூலம், SRH அணி புள்ளிப் பட்டியலில் 2ஆவது இடத்திற்கு முன்னேறியது.

Similar News

News March 22, 2026

CPM-க்கு 5 தொகுதிகள்தான்.. நீடிக்கும் இழுபறி

image

CPM, 5 தொகுதிகளில் போட்டியிட ஸ்டாலின் வலியுறுத்தி வருவதாகவும், அதற்கு நிர்வாகிகள் சம்மதிக்கவில்லை எனவும் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் பேசிய அவர், தொகுதிகளைக் குறைத்தாலும் திமுக கூட்டணியை விட்டு CPM வெளியேறாது; 6 தொகுதிகள் வேண்டும் என்பதால் தாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றார். நிர்வாகக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு அடுத்தகட்ட முடிவை அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.

News March 22, 2026

மாதம் 21 முறை விந்தணுவை வெளியேற்றினால்..

image

சுயஇன்பம் மூலம் விந்தணுக்களை வெளியேற்றுவதால் ஆண்மைக்கு ஆபத்து என்ற பேச்சுகள் உலா வருகின்றன. இந்நிலையில், மாதத்திற்கு 21 முறை விந்தணுக்களை வெளியேற்றினால் ஆண்களுக்கு புரோஸ்டேட் கேன்சரின் ஆபத்து 30% குறைவதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் கூறுகின்றன. விந்தணு வெளியேறும்போது புரோஸ்டேட் சுரப்பியில் தேங்கியிருக்கும் தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் வெளியேற்றப்படுவதால், கேன்சர் பாதிப்பு குறைகிறதாம்.

News March 22, 2026

ஸ்டிக்கர் ஒட்டுகிறதா தவெக?

image

தவெக ஸ்டிக்கர் ஒட்டிய எவர்சில்வர் பாத்திரங்கள், பூஸ்ட் பாக்ஸ், குடிநீர் பாட்டில் என அடுத்தடுத்து சிக்குவது செய்திகளாக வெளியாகின்றன. ஆனால், மற்ற கட்சிகளும் ஹாட் பாக்ஸ் என பரிசுப் பொருள்களை வழங்கும்போது எப்படி தவெக மட்டும் ஹெட்லைனில் வருகிறது என்று தவெகவினர் கேள்வி எழுப்புகின்றனர். இது அரசியல் களத்தில் தற்போது விவாதப்பொருளாகியுள்ளது. உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!