News May 19, 2024

KKRvsRR: மழையால் டாஸ் தாமதம்

image

KKR-RR இடையேயான ஐபிஎல் போட்டி, இன்று கவுகாத்தியில் நடைபெற உள்ளது. இந்நிலையில், டாஸ் போடுவதற்கு இன்னும் சில நிமிடங்களே இருந்த நிலையில், தற்போது திடீரென மழை பெய்து வருகிறது. இதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை நின்ற பிறகு டாஸ் போடப்படும் என்றும், ஒருவேளை மழை நிற்காமல் பெய்தால் ஓவர்கள் குறைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இன்றைய போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்று கமெண்டில் சொல்லுங்க.

Similar News

News March 17, 2026

தமிழக தேர்தல் வரலாற்றில் முதல்முறை இது நிகழுமா?

image

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் இதுவரை எந்தவொரு கட்சியும் தனியாக 50% வாக்குகளை பெற்றதில்லை. அதேநேரம், 1971 தேர்தலில் திமுக பெற்ற 48.58% வாக்குகளே தேர்தலில் ஒரு கட்சி பெற்ற அதிகபட்ச வாக்கு சதவீதம் ஆகும். அடுத்தடுத்த இடங்களில் அதிமுக 44.4% (1991), திமுக 42.07% (1996), காங்., 41.10% (1967) ஆகிய கட்சிகள் உள்ளன. 2026 தேர்தலில் ஏதேனும் ஒரு கட்சி 50% வாக்குகளைப் பெறுமா? உங்கள் கணிப்பு என்ன?

News March 17, 2026

நடிகை த்ரிஷா திடீர் முடிவு.. ரசிகர்கள் அதிர்ச்சி

image

நடிகை த்ரிஷா சினிமாவை விட்டு விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 75 படங்களில் நடித்துள்ள அவர், கடந்த 3 மாதங்களாக புதிய படங்கள் எதிலும் கமிட் ஆகவில்லையாம். அவரது நடிப்பில் ‘கருப்பு’ உள்ளிட்ட 3 படங்கள் ஷூட்டிங் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளன. இது த்ரிஷாவின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

News March 17, 2026

பதற்றத்தில் புக் செய்யாதீங்க.. இந்தியன் ஆயில்

image

வீட்டு உபயோக LPG சிலிண்டர் தடையின்றி கிடைப்பதால் மக்கள் பீதியடைய வேண்டாம் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. கமர்ஷியல் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் பீதியில் வீட்டு சிலிண்டர்களை முன்னெச்சரிக்கையாக புக் செய்து வருகின்றனர். இந்நிலையில், சிலிண்டர் விநியோகம் தடையின்றி நடைபெறுவதாகவும், பதற்றத்தில் மக்கள் தேவையின்றி கேஸ் புக் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!