News May 19, 2024
ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை கேப்டனாக இருந்தவர் யார்?

2008இல் தொடங்கி ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற போட்டிகளில், 226 போட்டிகளுக்கு தோனி தலைமை தாங்கியுள்ளார். சிஎஸ்கே, ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகளுக்கு அவர் கேப்டனாக இருந்துள்ளார். இதற்கடுத்து, அதிகபட்சமாக மும்பை அணிக்கு ரோஹித் சர்மா 158 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார். 2024 ஐபிஎல் தொடரில்தான் 2 பேரும் கேப்டன் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
Similar News
News March 5, 2026
BREAKING: கூட்டணி.. இபிஎஸ் புதிய அறிவிப்பால் பரபரப்பு

அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை முடிவாகி இறுதி வடிவம் பெற்றுவிட்டதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கட்சியின் மா.செ., கூட்டத்தில் EPS அறிவித்துள்ளார். எனவே, தேர்தல் பணிகளை முடுக்கிவிடும்படி அவர் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். திமுகவும் தொகுதிப் பங்கீட்டை கிட்டத்தட்ட இறுதி செய்துள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
News March 5, 2026
நாதகவை பார்த்து பலருக்கு கண்ண உறுத்துது: சீமான்

இன்று அரசியல் என்பது அரிசியும், பருப்பும், வேட்டியும், சேலையும், ஆயிரமும், ஐநூறுமாக இருக்கிறது என சீமான் விமர்சித்துள்ளார். 100 ரூபாயை கொடுத்துவிட்டு ₹200-க்கு விளம்பரம் செய்வதாக கூறிய அவர், இந்த அரசியலை மாற்ற வேண்டும் என்றார். மேலும், நாதக தனித்து போட்டியிடுவது பலருக்கு கண்ணை உறுத்துகிறது எனவும், கூட்டணி வைக்காமல் எப்படி ஜெயிக்கிறோம் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் எனவும் சவால்விட்டிருக்கிறார்.
News March 5, 2026
யாரோ ஏவி விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார்: அமைச்சர்

விஜய் சுயமாக அரசியலுக்கு வரவில்லை; யாரோ ஏவி வந்திருக்கிறார் என்று அமைச்சர் பெரியகருப்பன் விமர்சித்துள்ளார். ஊழலுக்கு எதிரானவர் போல் காட்டிக்கொள்ளும் விஜய், பத்தாண்டுக் காலம் ஆட்சி பொறுப்பில் இருந்து ஊழல் செய்த அதிமுகவை விமர்சிக்கவில்லை; மாநில உரிமையை பறிக்கும் பாஜகவை கண்டுகொள்ளவில்லை. ஆனால், தமிழக மக்களுக்கு நன்மை செய்கின்ற திமுகவை மட்டும் தாக்குகிறார் என்று விமர்சித்தார்.


