News March 31, 2026
சைலண்ட் ஹார்ட் அட்டாக் பற்றி தெரியுமா?

லேசான அறிகுறிகளுடன் வரும் ஹார்ட் அட்டாக்கைதான் சைலண்ட் ஹார்ட் அட்டாக் என்கின்றனர். ➤எவ்வளவு ஓய்வு எடுத்தாலும் சோர்வாகவே இருக்கும் ➤அடிக்கடி மூச்சு வாங்கும் ➤திடீரென தலைசுற்றல், குமட்டல் (அ) வயிறு உப்புசம் ➤தூக்கமின்மை, தூங்கும்போதும் பதற்றம் ➤விட்டு விட்டு வரும் நெஞ்சு வலி ஆகியவை இதன் அறிகுறிகள் என டாக்டர்கள் கூறுகின்றனர். இவை உங்களுக்கு அடிக்கடி இருந்தால் உடனடியாக டாக்டரை அனுகுங்கள். SHARE.
Similar News
News April 9, 2026
திமுகவின் தோல்வி கோவையில் தொடங்கும்: அண்ணாமலை

திமுகவின் வெற்றி கோவை தெற்கில் இருந்து தொடங்கும் என ஸ்டாலின் பேசியிருந்தார். இந்நிலையில், திமுகவின் தோல்வி கோவை தெற்கில் தொடங்கி சேப்பாக்கம் வரை செல்லும் என அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். இந்த தொகுதியில் மட்டும் 18 சுயேச்சைகள், தொண்டாமுத்தூரில் கரூரைச் சேர்ந்த 3 சுயேச்சைகளை செந்தில் பாலாஜி போட்டியிட வைத்துள்ளதாக கூறினார். இவர்கள் அனைவரும் ஒரே நோட்டரியிடமே கையெழுத்து பெற்றதாகவும் தெரிவித்தார்.
News April 9, 2026
3 மாநிலங்களில் இன்று தேர்தல்!

கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. PM மோடி, ராகுல் காந்தி உள்பட அரசியல் தலைவர்கள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்ட நிலையில், கடந்த 7-ம் தேதியுடன் பிரசாரம் முடிந்தது. இதனையடுத்து இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், மே 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என ECI அறிவித்துள்ளது.
News April 9, 2026
ஒரு நல்ல மனிதன் செய்யும் வேலையா இது? சசிகலா

அதிமுகவில் துரோகிகள் அதிகமாகி விட்டனர் என EPS, OPS-ஐ சசிகலா விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன் மீதும், ஜெயலலிதா மீதும் வழக்கு போட்டு சிறையில் அடைத்த திமுகவை தாய் கழகம் என்று OPS எப்படி சொல்ல முடியும் என கேள்வி எழுப்பினார். அதிமுகவில் அமைச்சர் தொடங்கி முதல்வர் வரை உயரிய பதவிகளை வழங்கியும் OPS இந்த முடிவை எடுத்தது நியாயமா? ஒரு நல்ல மனிதன் செய்யும் வேலையா இது என சாடியுள்ளார்.


