News May 19, 2024
தோனி மீது அன்பை பொழிந்த ரசிகர்கள்

நடப்பு ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரான தோனிக்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு அளித்துள்ளனர். சென்னை, வான்கடே, சின்னசாமி, தரம்சாலா போன்ற அனைத்து மைதானங்களிலும், CSK மற்றும் தோனிக்கென்று தனி ரசிகர் படையே உள்ளது. ரசிகர்கள் காட்டும் அளவு கடந்த அன்பு தான், CSK அணியின் மிகப்பெரிய பலம். CSK அணி, இந்தாண்டு பிளே-ஆப்புக்கு முன்னேறவில்லை என்றாலும், ரசிகர்கள் மனதளவில் இடம்பிடித்துள்ளது.
Similar News
News March 12, 2026
பொதுத்தேர்வு மையங்களில் மேலும் கட்டுப்பாடு!

சில நாள்கள் முன், திருநெல்வேலியில் ஜெராக்ஸ் கடையில் மினி ஜெராக்ஸ் எடுத்து மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இதனையடுத்து தற்போது தமிழகம் முழுவதும் தேர்வு மையங்களுக்கு அருகில் உள்ள ஜெராக்ஸ் கடைகளை கண்காணிக்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், சந்தேகத்திற்கு இடமான நிகழ்வுகள் கடைகளில் நிகழ்ந்தால், உடனடியாக கலெக்டர்களிடம் புகார் அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
News March 12, 2026
இனி டெலிகிராமில் புது படங்களை பார்க்க முடியாது..

OTT-க்கு பணமில்லை என்பதால் பெரும்பாலானோர் புது படங்களை டெலிகிராமில் பார்க்கின்றனர். இதனால் தங்களின் வருமானம் பாதிக்கப்படுவதாக கூறி ஜியோ சினிமா, அமேசான் பிரைம் நிறுவனங்கள் புகார் எழுப்பியது. இந்நிலையில், சட்டவிரோதமாக பதிவேற்றப்படும் படங்கள் பதிவேற்றும் 3,100 சேனல்களை 3 மணி நேரத்திற்குள் நீக்க டெலிகிராமுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உங்கள் கருத்து?
News March 12, 2026
தங்கையை ரேப் செய்த அக்காவின் காதலன்

சென்னை, ஓட்டேரியில் 14 வயது பள்ளி மாணவியை, அக்காவின் காதலனே பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் அக்காவுக்கும், அவரது காதலனுக்கும் திருமணம் செய்ய இருவீட்டார் சம்மதம் தெரிவித்ததால், அவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அண்மையில் சிறுமியின் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த அவலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தலைமறைவான இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.


