News March 31, 2026
தமிழ்நாடு தேர்தல்.. புதிய கருத்துக்கணிப்பு

‘Vote Tracker’ என்ற பெயரில் CNN News18 புதிய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அண்மையில் எடுக்கப்பட்ட இந்த சர்வேயின்படி திமுக, அதிமுக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது. யார் யாருக்கு எத்தனை சீட்டுகள் கிடைக்கும், வாக்கு சதவீதம், முதல்வர் வேட்பாளர் யார் என்பதற்கு மக்கள் அளித்த ஆதரவு உள்ளிட்ட தகவல்கள் மேலே போட்டோக்களாக கொடுக்கப்பட்டுள்ளன. இடது பக்கமாக SWIPE செய்து பாருங்க.
Similar News
News April 13, 2026
IPL: ஹைதராபாத் பேட்டிங்

RR-க்கு எதிரான போட்டியில் SRH முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. இதுவரை தோல்வியே தழுவாமல் வீறுநடை போடும் RR, 5-வது வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் உள்ளது. மோசமான பவுலிங்கால் தத்தளிக்கும் SRH வெற்றி பாதைக்கு திரும்ப போராடும். இரு அணிகளிலும் அதிரடியான பேட்ஸ்மேன்கள் இருப்பதால் இன்றும் 220+ ரன்கள் குவிக்க வாய்ப்புள்ளது. பேட்டிங்கிற்கு சாதகமான உப்பல் மைதானத்தில் திறம்பட பந்துவீசும் அணியே வெற்றிபெறும்.
News April 13, 2026
மருக்களை ஒரே வாரத்தில் உதிர வைக்கும் வீட்டு வைத்தியம்

உடம்பு (ம) முகத்தில் இருக்கும் மருக்கள் உங்கள் அழகை குறைக்கிறதா? கவலையை விடுங்க. பூண்டை வைத்தே இந்த மருக்களை அகற்றலாம் என நிபுணர்கள் சொல்கின்றனர். இதற்கு, ஒரு பூண்டு பல்லை நசுக்கி, மருக்கள் மீது தடவி, அதனை பஞ்சை வைத்து மூடுங்கள். இதை தினமும் செய்து வந்தால், மருக்கள் கருப்பாகி 7 – 10 நாள்களுக்குள் உதிர்ந்துவிடும் என்கின்றனர். இந்த வீட்டு வைத்தியத்தை அனைவரும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.
News April 13, 2026
TVK-வுக்கு கேமரா சின்னத்தில் ஓட்டு?

பெரம்பூர் தொகுதியில் தவெக, தவாக ஆகிய இரு கட்சிகளுமே பிரசாரத்தில் கட்சிப் பெயரை சுருக்கமாக TVK என பயன்படுத்துவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. TVK-வுக்கு கேமரா சின்னத்தில் வாக்களியுங்கள் என தவாகவினர் பிரசாரம் செய்வது, தவெகவினருக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. இதுகுறித்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இருதரப்பும் புகாரளித்துள்ளனர். இதையடுத்து, உரிய முடிவெடுக்கப்படும் என EC அதிகாரிகள் கூறியுள்ளனர்.


