News May 19, 2024
கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தபோது கைது

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் சுருதி அவர்களின் உத்தரவின் படி தனி படை அமைத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கண்ணமங்கலம் கூட்ரோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் பின்புறம் பிரபு உள்ளிட்ட இருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Similar News
News November 8, 2025
ராணிப்பேட்டை: பட்டாவில் பெயர் மாற்றமா? இனி ஈஸி!

ராணிப்பேட்டை மக்களே! உங்களது பட்டாவில் வாரிசு பெயர்களை சேர்க்க இனி எங்கும் அலைய வேண்டாம்.இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்க, அவர்களின் வாரிசுகளை அதில் சேர்க்க அரசு சார்பாக எளிய வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு<
News November 8, 2025
ராணிப்பேட்டை: அரசு பேருந்தை சிறைபிடித்த மக்கள்!

ராணிப்பேட்டை ரெட்டிவலம் அருகில் நேற்று (நவ.7) அரக்கோணம் நோக்கி சென்ற அரசு பேருந்து பைக் மீது மோதியது. இந்த விபத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்து பேருந்தை சிறைப்பிடித்து கண்டக்டர் மற்றும் டிரைவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பின்னர் அரசு பஸ் நெமிலி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டது.
News November 8, 2025
ராணிப்பேட்டை:ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய தகவல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் இன்று (நவம்பர் 8) அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் திருத்தம், நீக்கம், முகவரி மாற்றம் போன்ற பல்வேறு சேவைகளை இந்த குறைதீர் கூட்டத்தில் விண்ணப்பம் அளித்து பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


