News May 19, 2024

வாலிபரை தாக்கியவர் மீது வழக்கு பதிவு

image

கன்னியாகுமரி மாவட்டம் கீழ்குளம் பாறையடி பகுதியை சேர்ந்தவர் ராகேஷ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜீவ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று (மே-18) ராஜேஷ் கீழ்குளம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது ராஜீவ் அவரை வழிமறித்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து ராஜேஷ் கொடுத்த புகாரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

Similar News

News March 13, 2026

குமரி : குறைந்த வட்டியில் ₹10 லட்சம் கடன்

image

சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு தொழில் தொடங்க ‘விராசத் கைவினை கலைஞர் கடன் திட்டம்’ ₹10 லட்சம் வரை கடன் வழங்குகிறது. இதற்கு 4 முதல் 6 % மட்டுமே வட்டி வசூலிக்கப்படுகிறது. கடனை திருப்பி செலுத்த 5 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கப்படுகிறது. இதில் கடன் பெற, தொடங்கவிருக்கும் தொழிலில் 5 வருட முன்அனுபவம் தேவை. விண்ணப்பிக்க மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.

News March 13, 2026

குமரி; வங்கியில் ரூ.85,000 சம்பளத்தில் வேலை, டிகிரி போதும்

image

IDBI வங்கியில் 200 Assistant manager காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு, டிகிரி மற்றும் 2 வருட முன் அனுபவம் உள்ள வயது 21 முதல் 30 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ஊதியமாக ரூ. 48480 – ரூ.85,920 வரை வழங்கப்படும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> மார்ச்19 க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

News March 13, 2026

குமரி: காவல் படையில் சேர அரிய வாய்ப்பு.. APPLY…

image

கன்னியாகுமரி மாவட்ட கடலோர ஊர்க்காவல் படை அமைப்பில் மீனவ இளைஞர்கள் ஆண்களுக்கான 28 காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டியுள்ளது. எனவே, விருப்பமுள்ள 18 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் இன்று, நாளை (மார்ச் 13, 14) ஆகிய 2 நாட்களில் மட்டும் படிவங்களை பெற்று மார்ச் 20-ம் தேதிக்குள் பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT

error: Content is protected !!