News May 19, 2024
IPL: பஞ்சாப் அணி பேட்டிங்

SRH-PBKS இடையேயான ஐபிஎல் போட்டி, இன்னும் சற்று நேரத்தில் ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் தொடங்க உள்ளது. இதில், டாஸ் வென்ற PBKS அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய SRH அணி, 2ஆவது இடத்தை பிடிக்க இன்றைய போட்டியில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும். ஹைதராபாத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், போட்டி பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
Similar News
News April 4, 2026
BREAKING: தங்கம் விலை கிராமுக்கு ₹100 உயர்வு!

சென்னையில், தங்கம் விலை தொடர்ந்து 2-வது நாளாக சவரனுக்கு ₹800 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் இன்று(ஏப்.4) 1 கிராம் ₹13,950-க்கும், சவரன் ₹1,11,600-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் இந்த வாரம் தங்கம் விலை ஏறுமுகத்தை கண்டதன் எதிரொலியே நம்மூரில் கடந்த 2 நாள்களில் சவரனுக்கு ₹1,600 உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது.
News April 4, 2026
மீண்டும் இந்தியை திணிக்க முயற்சி: ஸ்டாலின்

CBSE-யில் 6-ம் வகுப்பு முதல் 3-வது மொழி கட்டாயம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு, இந்தியை திணிக்கும் முயற்சி என ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த அணுகுமுறை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. இந்தியாவின் பலம் அதன் பன்முகத்தன்மையில் உள்ளது, திணிக்கப்பட்ட ஒருமைப்பாட்டில் அல்ல என சாடினார். மேலும், இந்தி திணிப்புக்கு எதிராக அதிமுக குரல் கொடுக்குமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
News April 4, 2026
கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் மரணம்.. அடுத்த துயரம்

பிஹாரின் துர்க்கவுலியா & ரகுநாத்பூர் பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் ஹாஸ்பிடலில் சிகிச்சையில் உள்ளனர். இது தொடர்பாக 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 2016 முதல் பிஹாரில் மதுவிலக்கு உள்ள நிலையில், கள்ளச்சாராயம் குடித்து மரணிக்கும் துயரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2016 முதல் தற்போது வரை கள்ளச்சாராயத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 1,300 ஆக உயர்ந்துள்ளது.


