News May 19, 2024
அடுத்தகட்ட பயிற்சிக்கு இந்திய வீரர்கள்

NCA எனும் தேசிய கிரிக்கெட் அகாடமி, வீரர்கள் சிலரை அடுத்தகட்ட பயிற்சிக்காக தேர்வு செய்துள்ளது. ஷ்ரேயஸ், இஷான், முஷீர், மயங்க், உம்ரான், ஆவேஷ், குல்தீப் சென், ஹர்ஷித், கலீல், அசுடோஷ், தேஷ்பாண்டே, ரயான் பராக், சாய் சுதர்ஷன், சாய் கிஷோர், படிக்கல், ப்ரித்திவி ஷா ஆகியோர் High Performance பயிற்சியை மேற்கொள்ளவுள்ளனர். இதன் அடிப்படையில்தான் வீரர்கள் சர்வதேசப் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
Similar News
News March 22, 2026
விஜய்யுடன் கூட்டணியா… முடிவை அறிவித்த வேல்முருகன்

தவெக ஒரு அரசியல் புரிதலற்ற கட்சி என வேல்முருகன் விமர்சித்துள்ளார். தவெகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, தமிழகத்தின் சமூகநீதி வரலாறு குறித்து எந்த தெளிவும் அற்ற இளைஞர்களை கொண்ட கட்சியாக தவெக இருக்கிறது என அவர் சாடியுள்ளார். வரும் தேர்தலில் தவெகவுடன் தவாக கூட்டணி வைப்பதற்கான வாய்ப்பே இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
News March 22, 2026
படுக்கைக்கு அழைப்பு.. பிரபல நடிகை பகீர்

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கிறார்கள் என தெலுங்கு நடிகை ஸ்ரீ சத்யா குற்றஞ்சாட்டியுள்ளார். மிஸ் விஜயவாடா அழகி பட்டம் வென்று சினிமாவில் அறிமுகமான அவர், பிக்பாஸில் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில், சினிமா இண்டஸ்ட்ரியில் ‘அட்ஜஸ்மெண்ட்’ தொல்லை இருந்ததால் சீரியல் பக்கம் திரும்பியதாக குறிப்பிட்ட அவர், நடிப்பில் கவனம் செலுத்தும் பெண்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
News March 22, 2026
கரூர் ஃபார்முலாவில் திமுக? செந்தில் பாலாஜி

கரூரில் வாக்காளர்களை அடைத்துவைக்க <<19438297>>மனிதப்பட்டிகளை<<>> திமுக தயார் செய்வதாக அதிமுக Ex அமைச்சர் MR விஜயபாஸ்கர் புகாரளித்திருந்தார். இந்நிலையில், ஒவ்வொரு வார்டுக்குமான பூத் கமிட்டி அலுவலகங்கள் தான் அவை என்றும், அதற்குரிய அனுமதியை முறையாக திமுக பெற்றுள்ளதாகவும் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மட்டுமே அதிமுகவினர் ஆளும்கட்சி மீது வைப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.


