News March 30, 2026
₹4.13 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்

வாரத்தின் முதல்நாளே பங்குச்சந்தைகள் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளன. காலை முதலே சரிவில் இருந்த பங்குச்சந்தைகள், இன்றைய வர்த்தக நாளின் முடிவில் நிஃப்டி 488 புள்ளிகள் குறைந்து 22,331 புள்ளிகளிலும், சென்செக்ஸ் 1,635 புள்ளிகள் சரிந்து 71,947 புள்ளிகளிலும் நிறைவடைந்தது. இதனால் ஒரேநாளில் முதலீட்டாளர்கள் சுமார் ₹4.13 லட்சம் கோடியை இழந்துள்ளனர்.
Similar News
News April 6, 2026
BREAKING: தமிழக MP-க்கள் 6 பேர் பதவியேற்பு

தமிழகத்தில் போட்டியின்றி தேர்வான 6 ராஜ்ய சபா எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். திமுக சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், அதிமுக சார்பில் தம்பிதுரை, பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ், தேமுதிக சார்பில் LK சுதீஷ், காங்., சார்பில் கிறிஸ்டோபர் மாணிக்கம் ஆகியோர் ராஜ்ய சபா எம்பியாக பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு மாநிலங்களைவைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
News April 6, 2026
இன்ஸ்டா காதல்.. மாணவர் காரில் கடத்தி தாக்குதல்!

இன்ஸ்டா காதல் போலீஸ் கேஸில் முடிந்த சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. சசிகுமார்(19) இன்ஸ்டா காதலியான ரித்திகாவுக்கு(21) ₹1,87,000 பணம் கொடுத்துள்ளார். ரித்திகா வேறோருவருடன் பழகுவதை அறிந்த சசிகுமார், Breakup செய்து விட்டு, பணத்தை திரும்ப கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ரித்திகா தர்ஷினி, சஞ்சய், சரவணன் ஆகியோருடன் சேர்ந்து சசிகுமாரை காரில் கடத்தி தாக்கியுள்ளார். தற்போது 4 பேரும் கைதாகியுள்ளனர்.