News May 19, 2024
சிக்கன் விலை உயர்ந்தது

வார விடுமுறை நாளான இன்று (ஞாயிறு) சிக்கன் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது. கொள்முதல் பண்ணைகளில் கறிக்கோழி விலை கிலோ (உயிருடன்) ₹3 உயர்ந்து, ₹141ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொள்முதல் விலை உயர்ந்ததால் மற்ற மாவட்டங்களில் சிக்கன் விலை கிலோ ₹20 வரை உயர வாய்ப்புள்ளது. முட்டை விலை மாற்றமின்றி ₹5.80 காசுகளாகவும், முட்டைக் கோழி விலை ₹103 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
Similar News
News March 12, 2026
மார்ச் 12: வரலாற்றில் இன்று

*1930 – மகாத்மா காந்தி பிரிட்டிஷ் அரசின் உப்பு ஆதிக்கத்துக்கு எதிராக 200 மைல் நீள தண்டி யாத்திரையை தொடங்கினார். 1954 – சாகித்ய அகாடமி இந்திய அரசால் தொடங்கப்பட்டது. *1993 – மும்பையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 300 பேர் கொல்லப்பட்டனர். * 1984 – இந்திய பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் பிறந்த தினம். * 2009 – தமிழ்த் திரைப்பட நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் நினைவு தினம்.
News March 12, 2026
சிலிண்டர் தட்டுப்பாட்டால் திருமணம் ரத்து

சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் ரத்தாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக திருமண மண்டப உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளது. சிலிண்டர் பற்றாக்குறையால் வந்த திருமண மண்டபங்களில் வந்த விருந்தினர்களுக்கு உணவளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே போர்கால அடிப்படையில் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருமண மண்டப உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News March 12, 2026
பாரதியார் பொன்மொழிகள்

*விழும் வேகத்தை விட எழும் வேகம் அதிகமாக இருந்தால் தோற்கடிக்க அல்ல உன்னைப் பார்க்கவே எவனும் பயப்படுவான். *சொல்வது தெளிந்து சொல்; செய்வது துணிந்து செய். *காயங்கள் குணமாக காலம் காத்திரு; கனவுகள் நினைவாக காயம் பொறுத்திரு. *மலையை பார்த்து வியந்துவிடாதே; மலை மீது ஏறினால் அதுவும் உன் காலின் கீழ்தான். *விழாமல் ஓடுவேன் என்பது நம்பிக்கை.. விழுந்தாலும் எழுந்து ஓடுவேன் என்பது தன்னம்பிக்கை.


