News March 30, 2026

நடிகர் பிரகாஷ் ராஜ் துயரம்.. கண்ணீர் அஞ்சலி

image

பிரபல நடிகர் பிரகாஷ்ராஜின் தாயார் சுவர்ணலதா ராஜ்(86) காலமானார். வயது மூப்பின் காரணமாக அவர் பெங்களூருவில் உள்ள இல்லத்தில் இயற்கை எய்தினார். இன்று மாலை சுவர்ணலதாவின் இறுதிச் சடங்கு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவுக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Similar News

News April 8, 2026

தமிழக தேர்தல்.. ECI முக்கிய ஆலோசனை

image

TN சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக CEC ஞானேஷ் குமார், அர்ச்சனா பட்நாயக் உடன் ஆலோசனை நடத்தியுள்ளார். காணொலி வாயிலாக நடந்த கூட்டத்தில் தேர்தல் ஏற்பாடுகள், பாதுகாப்பு பணிகள், பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 15 நாள்களே உள்ள நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்புவது & அவற்றை பாதுகாப்பது குறித்தும் ஞானேஷ் குமார் கேட்டறிந்திருக்கிறார்.

News April 8, 2026

உண்மையான காங்கிரஸ் தவெக பக்கம் உள்ளது: விஜய்

image

தவெகவிற்கு ஆதரவாக சில தமிழக காங்., தலைவர்கள் கருத்து தெரிவிப்பது பற்றி விஜய் முதல்முறையாக பேசியுள்ளார். கோடி கோடியாக கொடுத்து தமிழக காங்.,ஐ ஸ்டாலின் தனது பையில் போட்டுக் கொண்டதாகவும் என நெல்லை பரப்புரையில் அவர் விமர்சித்தார். அதேநேரம், உண்மையான காங்., தவெக பக்கம் உள்ளதாகவும் கூறினார். பல பொய்களையும் புரட்டுகளையும் திமுக ஏவி வருவதாகவும் அவர் மேலும் சாடினார்.

News April 8, 2026

விஜயகாந்தின் வலதுகரம் கட்சியிலிருந்து விடைபெற்றார்

image

தேமுதிக செய்தித் தொடர்பாளர் மீசை ராஜேந்திரன் கட்சியிலிருந்து விலகியுள்ளார். விஜயகாந்த் கட்சி தொடங்கியது முதலே அவருடன் பயணம் செய்து வந்த அவர் பிரேமலதாவுக்கும் பக்க பலமாக இருந்து வந்தார். தேமுதிகவில் 3 முறை தேர்தலில் போட்டியிட்ட அவருக்கு இம்முறை சீட் வழங்காததால் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், விஜயகாந்தின் வலது கரமே கட்சியிலிருந்து விடைபெற்றதாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

error: Content is protected !!