News May 19, 2024

குற்றவாளிகளின் பாதுகாப்பே மோடிக்கு முக்கியம்: காங்.

image

அதிகாரப் பசியில் இருக்கும் பிரதமர் மோடிக்கு இந்திய மகள்களின் பாதுகாப்பை விட பாலியல் குற்றவாளிகளின் பாதுகாப்பே முக்கியமாக இருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா, பிரிஜ் பூஷண் சிங் போன்றவர்களுக்கு மோடி அடைக்கலம் தருவதாக குற்றம்சாட்டி பாஜக அரசை கடுமையாக சாடினார்.

Similar News

News April 5, 2026

கேஸ் தட்டுப்பாடு.. மாதம் ₹25,000 இழப்பீடு: விக்கிரமராஜா

image

சிலிண்​டர் தட்​டுப்​பாட்​டால் மூடப்​பட்ட கடைகளுக்கு அரசு மாதம் ₹25,000 இழப்​பீடு வழங்க வேண்​டும் என விக்​கிரம​ராஜா வலி​யுறுத்​தி​யுள்​ளார். போர்க்​கால அடிப்​படை​யில் சிலிண்​டர் தட்​டுப்​பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்றும் கூறியுள்ளார். வணிக சிலிண்டர் தட்டுப்பாட்​டால் ஏராளமான ஹோட்டல்கள் மற்றும் டீ கடைகள் மூடப்பட்டு, பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

News April 5, 2026

விஜய் அரசியலை தாக்கிய சீமான்

image

திருச்சி பிரசாரத்தில் விஜய் பேசியதை சீமான் கடுமையாக சாடியுள்ளார். எனக்காகவும், உங்களுக்காகவும் நியாயம் கேட்டு வந்துள்ளேன் என விஜய் பிரசாரத்தின்போது பேசியிருந்தார். இந்நிலையில், சொந்த வலி என்பது மக்களுடைய வலி கிடையாது என்றும் மக்கள் வலிக்கு தீர்வு காண்பவனே தலைவன் என்றும் சீமான் விமர்சித்தார். மேலும், தன்மீது 262 வழக்குகள் இருந்ததாகவும், அதற்காக ஏறாத நீதிமன்றமோ, போகாத சிறையோ இல்லை என்றார்.

News April 5, 2026

இந்தியா நோக்கி வரும் அடுத்த LPG கப்பல்

image

மேற்காசிய போர் பதற்றத்திற்கு இடையே இந்தியக் கொடியுடன் கூடிய ‘கிரீன் சான்வி’ என்ற எரிவாயு கப்பல் ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாகக் கடந்துள்ளது. சுமார் 46,650 மெட்ரிக் டன் LPG எரிவாயு உடன் வந்து கொண்டிருக்கும் இந்த கப்பல், இன்னும் சில நாள்களில் இந்தியாவை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 8 கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை கடந்து வந்துள்ளன. இன்னும் 15 கப்பல்கள் வர உள்ளன.

error: Content is protected !!