News May 19, 2024

பர்கூர் அருகே பயங்கர விபத்து

image

பர்கூர் அருகே உள்ள செட்டிப்பள்ளி பகுதியில் நேற்று மதியம் 3 மணியளவில் காரும் இருசக்கர வாகனமும் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். காரின் அடியில் சிக்கிக்கொண்ட பெண்ணின் உடல் 15 அடி தூரம் வரை இழுத்து சென்றதில் பாதி உடல் அடையாளம் தெரியாத அளவிற்கு சிதைந்து காணப்பட்டது. விபத்திற்கான காரணம் குறித்து கந்திகுப்பம் போலிசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 19, 2026

கிருஷ்ணகிரி: விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் அறிவிப்பு!

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் ஜனவரி 23, 2026 (வெள்ளிக்கிழமை) காலை 10:00 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், விவசாயிகள் திரளாகக் கலந்துகொண்டு தங்கள் வேளாண் சார்ந்த கோரிக்கைகள் மற்றும் குறைகளைத் தெரிவித்து தீர்வு காணலாம், என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News January 19, 2026

கிருஷ்ணகிரி: செவிலியர் துறையில் 999 பணியிடங்கள் APPLY NOW

image

தமிழ்நாடு சுகாதார துறையில், செவிலியர் உதவியாளர் (தரம்-2) 999 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th & Nursing Assistants Course முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் பிப்.08-க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். *சூப்பர் வாய்ப்பு! உங்கள் நண்பருக்கு ஷேர் பண்ணுங்க*

News January 19, 2026

கிருஷ்ணகிரியில் வாலிபர் பரிதாப பலி!

image

சனமாவு வனப்பகுதி அருகே சாலையைக் கடக்க வந்த மான் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மான் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!