News March 30, 2026

பிரசாரத்தில் அஜித் போட்டோவுடன் EPS

image

கன்னியாகுமரியில் தளவாய் சுந்தரத்தை ஆதரித்து EPS தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கிருந்த நிர்வாகிகள், EPS-அஜித் ஒன்றாக அமர்ந்திருக்கும் போட்டோவை அவருக்கு பரிசளித்தனர். அதை EPS மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டதோடு மட்டுமின்றி தொண்டர்கள் மத்தியில் உயர்த்தியும் காண்பித்தார். அதில், ‘Never Ever Give Up’ என்ற அஜித் பட வசனமும் இடம்பெற்றிருந்தது. <<-se>>#TNElection2026<<>>

Similar News

News April 3, 2026

இன்று CSK ஜெயிக்க என்ன செய்ய வேண்டும்?

image

பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டிய கட்டாயம் <<19553479>>CSK<<>>-வுக்கு உள்ளது. சஞ்சு, ருதுராஜ் நல்ல ஓப்பனிங் கொடுக்க வேண்டும். மிடில் ஆர்டரில் பிரேவிஸ் களமிறங்கினால், அவருடன் ஆயுஷ் மாத்ரே, துபே ஆகியோரும் பங்களிக்க வேண்டும். சென்னை ஸ்பின் பிட்ச் என்பதால், நூர் அகமது மீது பெரிய நம்பிக்கை உள்ளது. அவருடன் கம்போஜ், ஹென்றி, கலீல் ஆகியோர் சிறப்பாக பவுலிங் செய்தால், வெற்றி நிச்சயம். PBKS-ஐ வீழ்த்தி CSK இன்று வெற்றி பெறுமா?

News April 3, 2026

டிஜிட்டல் Census.. ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

image

✱Census <>இணையதளத்திற்கு <<>>செல்லவும் ✱மாநிலம், குடும்ப தலைவர் பெயரை கொடுத்து, Login செய்யவும் ✱வீட்டு முகவரி, வகை(சுவர்,கூரை), வசதி(மின்சாரம்,தண்ணீர்,கழிப்பறை), சொத்து விவரம்(டிவி,இன்டர்நெட்,வாகனம்) ஆகியவற்றை குறிப்பிடவும் ✱குடும்ப உறுப்பினர்கள்(வேலை, சாதி) தகவல்களை கொடுக்கவும் ✱Submit செய்தவுடன் 16 இலக்க ID கிடைக்கும் ✱கணக்கெடுப்பாளரிடம் இந்த நம்பரை கொடுத்தால் போதும். தகவல்கள் பதிவாகிவிடும். SHARE.

News April 3, 2026

சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்தது

image

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து 2-வது நாளாக குறைந்துள்ளது. தற்போது 1 அவுன்ஸ் (28g) தங்கம் $108 குறைந்து $4,676-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி 1 அவுன்ஸ் $72-க்கு விற்பனையாகிறது. காலை 9 மணி வரை இதே நிலை நீடித்தால், இந்திய சந்தையிலும் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.

error: Content is protected !!