News May 19, 2024
வெளிமாநில, வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு காப்பீடு

வேலை, கல்வி, வணிகம் போன்ற காரணங்களுக்காக வெளிநாடு, வெளி மாநிலங்களுக்கு புலம்பெயரும் தமிழர்களுக்கு, அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தவுள்ளது. 18-55 வயது வரை உள்ள தமிழர்கள் http://nrtamils.tn.gov.in-இல் ஒருமுறை பதிவு கட்டணமாக ₹200 செலுத்தி உறுப்பினர் அட்டை பெற்றால், காப்பீட்டுத் தொகை ₹5,00,000, ₹10,00,000 பெறலாம் என அரசு அறிவித்துள்ளது. முழு விவரங்களை <
Similar News
News August 28, 2025
கோர்ட் கதவை தட்டிய கேமிங் நிறுவனங்கள்

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை எதிர்த்து, முன்னனி ஆன்லைன் கேமிங் நிறுவனமான A23 கர்நாடகா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இது வரும் 30-ம் தேதி அவசர வழக்காக விசாரிக்கப்பட உள்ளது. கடந்த 20-ம் தேதி லோக் சபாவில் நிறைவேற்றப்பட்ட இம்மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததால் தற்போது சட்டமாகியுள்ளது. இதன்படி, ஆன்லைன் கேமிங் சேவைகளை வழங்கினால் 3 ஆண்டுகள் சிறை, ₹1 கோடி அபராதம் விதிக்கப்படும்.
News August 28, 2025
ரேஷன் கார்டு ரத்து… உடனே இதை செய்யுங்க!

ஆதார் மற்றும் ரேஷன் அட்டை விவரங்களை சரிபார்க்கும் e-KYC முறையை செய்து முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு, TNPDS போர்ட்டலில் உள்நுழைந்து → e-KYC என்பதை கிளிக் செய்து → ரேஷன் கார்டு எண் மற்றும் ஆதார் எண்ணை உள்ளிடவும் → பிறகு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் OTP-ஐ உள்ளிடுங்கள். ஆக.31-க்குள் இதை செய்யவில்லை எனில் உங்கள் ரேஷன் கார்டு செயலிழக்கலாம். SHARE.
News August 28, 2025
இந்தியா இதை மட்டும் செய்தால் நாளையே 25% வரி ரத்து: USA

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், நாளையே இந்திய பொருள்களுக்கான வரி 25% குறைக்கப்படும் என வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ தெரிவித்துள்ளார். இந்தியா மீதான வரிவிதிப்பால் அமெரிக்கர்கள் தங்களது வருமானம், வேலைகளை இழப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்திய பகுதிகளை ஆக்கிரமித்த சீனாவை வர்த்தக கூட்டாளியாக பார்ப்பதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.