News May 19, 2024
CSK அணிக்கு எமனாகிய ஷிவம் தூபே

ஆர்சிபி – சிஎஸ்கே விளையாடிய விறுவிறுப்பான ஐபிஎல் போட்டியில் ஷிவம் தூபேவின் ஆட்டம் சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இலக்கை வேகமாக துரத்திக் கொண்டிருந்த வேளையில் அவர் களமிறங்கி 15 பந்துகளில் 7 ரன்கள் மட்டும் எடுத்து அவுட்டானார். அதோடு, நிதானமாக விளையாடி அரைசதம் கடந்த ரச்சின் ரவீந்திராவின் ரன் அவுட்டுக்கும் காரணமாக இருந்தார்.
Similar News
News August 28, 2025
கோர்ட் கதவை தட்டிய கேமிங் நிறுவனங்கள்

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை எதிர்த்து, முன்னனி ஆன்லைன் கேமிங் நிறுவனமான A23 கர்நாடகா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இது வரும் 30-ம் தேதி அவசர வழக்காக விசாரிக்கப்பட உள்ளது. கடந்த 20-ம் தேதி லோக் சபாவில் நிறைவேற்றப்பட்ட இம்மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததால் தற்போது சட்டமாகியுள்ளது. இதன்படி, ஆன்லைன் கேமிங் சேவைகளை வழங்கினால் 3 ஆண்டுகள் சிறை, ₹1 கோடி அபராதம் விதிக்கப்படும்.
News August 28, 2025
ரேஷன் கார்டு ரத்து… உடனே இதை செய்யுங்க!

ஆதார் மற்றும் ரேஷன் அட்டை விவரங்களை சரிபார்க்கும் e-KYC முறையை செய்து முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு, TNPDS போர்ட்டலில் உள்நுழைந்து → e-KYC என்பதை கிளிக் செய்து → ரேஷன் கார்டு எண் மற்றும் ஆதார் எண்ணை உள்ளிடவும் → பிறகு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் OTP-ஐ உள்ளிடுங்கள். ஆக.31-க்குள் இதை செய்யவில்லை எனில் உங்கள் ரேஷன் கார்டு செயலிழக்கலாம். SHARE.
News August 28, 2025
இந்தியா இதை மட்டும் செய்தால் நாளையே 25% வரி ரத்து: USA

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், நாளையே இந்திய பொருள்களுக்கான வரி 25% குறைக்கப்படும் என வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ தெரிவித்துள்ளார். இந்தியா மீதான வரிவிதிப்பால் அமெரிக்கர்கள் தங்களது வருமானம், வேலைகளை இழப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்திய பகுதிகளை ஆக்கிரமித்த சீனாவை வர்த்தக கூட்டாளியாக பார்ப்பதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.