News May 19, 2024
இந்திய வீராங்கனை ஜோதி தங்கம் வென்றார்

ஜெர்மனியில் உள்ள குர்பல்ஸ் காலாவில் நடைபெற்ற தடகளப் போட்டியில், இந்திய வீராங்கனை தங்கம் வென்றுள்ளார். மகளிருக்கான 100 மீட்டர் தடை தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற ஆந்திராவைச் சேர்ந்த ஜோதி யராஜி, 13.06 வினாடிகளில் இலக்கை அடைந்து முதலிடம் பெற்றார். தொடர்ந்து 2ஆவது முறையாக ஜெர்மனியில் தங்கம் வென்ற அவர், கடந்த வாரம் நெதர்லாந்தில் நடைபெற்ற போட்டியிலும் தங்கம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 13, 2025
இடையூறுகளை தாண்ட வேண்டும்: பிரேமலதா

தமிழகத்தில் இதுவரை எந்த அரசியல் கட்சிகளுக்கும் விதிக்காத நிபந்தனைகளை, தவெகவுக்கு விதித்ததாக விஜய் குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால், இதுபோன்ற பல இடையூறுகள், சவால்களை தாண்டித்தான் இலக்கை அடைய முடியும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், சினிமாவில் மிகவும் பிரபலமாக இருந்தபோதே விஜயகாந்தும் அரசியலுக்குள் நுழைந்து பல தடைகளை தாண்டியவர் என்றும் கூறியுள்ளார்.
News September 13, 2025
BCCI தலைவர் ரேஸில் இணைந்த ஹர்பஜன்

பஞ்சாப் கிரிக்கெட் சங்கம், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கை BCCI-ன் தலைவர் பதவிக்கு முன்மொழிந்துள்ளது. மாநில கிரிக்கெட் சங்கங்களால் முன்மொழியப்பட்டவர்களே BCCI தலைவருக்கான தேர்தலில் போட்டியிட முடியும். ஹர்பஜன் சிங் இதுவரை இந்திய அணிக்காக 367 சர்வதேச போட்டிகளில் விளையாடி 700 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். வரும் 28-ம் தேதி BCCI தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
News September 13, 2025
ஒவ்வொரு மாதமும் ₹9,250 கிடைக்கும்; அடடே திட்டம்!

ஒருமுறை முதலீடு செய்தால் மாதம் ₹9,250 வட்டியாக கொடுக்கிறது போஸ்ட் ஆபிஸின் மாதாந்திர வருமான திட்டம். இத்திட்டத்தில், ₹1 லட்சம் – ₹15 லட்சம் வரை நீங்கள் முதலீடு செய்யலாம். உதாரணத்துக்கு, ₹15 லட்சம் முதலீடு செய்தால், 5 ஆண்டுகளுக்கு மாதம் ₹9,250 வருமானமாக கிடைக்கும். 5 ஆண்டுகள் கழித்து திட்டம் முதிர்ச்சியடைந்தவுடன் நீங்கள் செலுத்திய ₹15 லட்சம் உங்களுக்கு திருப்பிக்கொடுக்கப்படும். SHARE.