News May 18, 2024

ஜப்பானியர்களிடம் இருந்து இதை கற்க வேண்டும்

image

ஆரோக்கியமான வாழ்விற்கு சில நல்ல பழக்கவழக்கங்கள் அவசியம். இதனை ஜப்பான் மக்கள் பின்பற்றி வாழ்கின்றனர். அவர்களிடமிருந்து நாம் சில வாழ்க்கை முறைகளை அவசியம் கற்றுக்கொள்ள வேண்டும். அவை, *அந்தந்த சீசனில் கிடைக்ககூடிய உணவு பொருட்களை உண்ணுதல், *கிரீன் டீ பருகுதல், *உடற்பயிற்சி செய்தல், *தேவையான நீர் பருகுதல், *சரியான நேரத்திற்கு உறங்குவது, *தொடர்ந்து கற்றல் போன்றவை ஆகும்.

Similar News

News March 22, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அமைச்சியல் ▶அதிகாரம்: அமைச்சு ▶குறள் எண்: 640 ▶குறள்: முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர். ▶பொருள்: முறைப்படித் தீட்டப்படும் திட்டங்கள்கூடச் செயல் திறன் இல்லாதவர்களிடம் சிக்கினால் முழுமையாகாமல் முடங்கித்தான் கிடக்கும்.

News March 22, 2026

நள்ளிரவில் பசி எடுக்குதா?

image

இரவு உணவு உண்ட பிறகும் நள்ளிரவில் பசி எடுக்கிறதா? அந்த நேரத்தில் பாஸ்ட் புட்களை சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொள்ள வேண்டும். நள்ளிரவு பசியைக் கட்டுப்படுத்த நிபுணர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். இரவு உணவில் பருப்பு, முட்டை, பனீர், கோதுமை ஆகியவற்றை சேர்ந்துகொண்டால் வயிறு நிறைந்துவிடும் என்றும் நாள் முழுவதும் புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும் எனவும் கூறுகின்றனர்.

News March 22, 2026

விமான டிக்கெட் விலைகள் அதிகரிக்குமா?

image

போர் காரணமாக ஏப்ரல் 1 முதல் விமான டிக்கெட் கட்டணங்கள் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் எண்ணெய் விலை உயர்வால், விமான எரிபொருள் (ATF) விலைகளும் உயர வாய்ப்புள்ளது. இதன் தாக்கம் டிக்கெட் கட்டணங்களில் ஏற்படலாம் என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் சமீபத்தில் கூறினார். இதற்கிடையில், சில விமான நிறுவனங்கள் ஏற்கெனவே கூடுதல் கட்டணம் வசூலித்து வருகின்றன.

error: Content is protected !!