News May 18, 2024

பட்டதாரி ஆசிரியர் பயிற்றுநர் தேர்வு முடிவு வெளியீடு

image

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட, பட்டதாரி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இத்தேர்வுக்கு, 41,485 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 9 பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டது. எழுத்து முறையில் நடைபெற்ற இத்தேர்வில் 40,136 பேர் பங்கேற்றனர். முடிவுகளை <>trb.tn.gov.in<<>> என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Similar News

News August 28, 2025

₹10,000 கோடியை இழக்கும் விளம்பரத் துறை

image

ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை மசோதாவால் முக்கிய ஸ்பான்சர்ஷிப் நிறுவனங்கள் உடனான ஒப்பந்தங்கள் அடுத்தடுத்து ரத்தாகி வருகின்றன. அத்துடன், இதுபோன்ற கேமிங் நிறுவன விளம்பரங்களில் நடித்துவந்த கங்குலி, தோனி, கில் உள்ளிட்டோரும், கோடிக்கணக்கில் தங்களது வருமானத்தை இழந்துள்ளனர். இந்நிலையில், கேமிங் தொடர்பான விளம்பரத் துறை ஒட்டுமொத்தமாக ஆண்டுக்கு ₹8,000 – ₹10,000 கோடியை இழக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

News August 28, 2025

வரி விவகாரம்: இந்தியாவுக்கு வாய்ப்பு கொடுத்த USA..

image

இந்தியா மீதான USA-வின் 50% வரி விதிப்பு நேற்று (ஆக.27) அமலுக்கு வந்தது. இந்நிலையில், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், இந்தியா மீதான வரியை 25% வரை குறைப்போம் என அமெரிக்க வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ அறிவித்துள்ளார். இதனை இந்தியா ஏற்று, ரஷ்யாவுடன் எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்தினால், இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றன.

News August 28, 2025

ஆஸ்கர் பரிந்துரையில் பா.ரஞ்சித்தின் தயாரிப்பு

image

பப்புவா நியூ கினியா சார்பில் முதல் முறையாக ஆஸ்கர் விருதுக்கு ‘Papa Buka’ என்ற படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மலையாள இயக்குநர் பிஜு குமார் தாமோதரன் இயக்கியுள்ள இப்படத்தை, அக்‌ஷய் குமார் பரிஜாவுடன் இணைந்து பா.ரஞ்சித் தயாரித்துள்ளார். இந்நிலையில், ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ஒரு படத்தில் இணை தயாரிப்பாக இந்தியா பங்கெடுத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பா.ரஞ்சித் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!