News May 18, 2024

சேலம் அருகே அருவியில் குளிக்க தடை

image

ஆத்தூர் அருகே கல்வராயன் மலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால்
ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து
அதிகரித்து வரும் காரணமாக மறு உத்தரவு வரும் வரை ஆணைவாரி நீர்வீழ்ச்சி மற்றும் முட்டல் ஏரி மற்றும் படகு சவாரி ஆகியவற்றிற்கு தடை விதிப்பதாக வனத்துறை அறிவித்துள்ளது. இதனால் விடுமுறையை கொண்டாட வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Similar News

News August 22, 2025

7.5% இட ஒதுக்கீடு: சேலத்தில் 1,903 பள்ளி மாணவர்கள் பயன்!

image

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்புகளைப் பெறுவதற்காக, தமிழக அரசு 7.5% இட ஒதுக்கீட்டை வழங்குகிறது. இந்த இட ஒதுக்கீடு மருத்துவப் படிப்புகள் உட்பட அனைத்துப் பட்டப் படிப்புகளுக்கும் பொருந்தும். அதன்படி, சேலம் மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் (2021-2025) 7.5% இட ஒதுக்கீடு மூலம் மொத்தம் 1,903 மாணவர்கள் பயனடைந்துள்ளனர் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News August 22, 2025

பதிவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

image

தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் பதிவு செய்ய சேலம் மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் 12.25 லட்சம் மானியத்தில் மாம்பழத்தில் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள மற்றும் உழவா் உற்பத்தியாளா் குழுவைச் சோ்ந்த விவசாயிகள் இணையதளத்தில் பதிவுசெய்து பயன்பெறுமாறு சேலம் மாவட்ட மாவட்ட ஆட்சியா் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

News August 22, 2025

சேலத்தில் முற்றிலும் இலவசம் மிஸ் பண்ணிடாதீங்க!

image

சேலம் மக்களே இந்தியன் வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் சேலம் கொண்டலாம்பட்டி பைபாஸ் அருகில் உள்ள R.R திருமண மண்டபத்தில் இருசக்கர வாகனம் பராமரித்தல், பழுது நீக்குதல் இலவச பயிற்சி 30 நாட்கள் நடைபெறவுள்ளது. பயிற்சியில் சேர விரும்புபவர்கள் ஆக.30- க்கும் நேரில் வரவும். கூடுதல் விவரங்களுக்கு 0427 -2274478 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம்.

error: Content is protected !!