News May 18, 2024

நாகை மக்களவைத் தொகுதி காலியானதாக அறிவிப்பு

image

நாகை மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்பி செல்வராஜ் அண்மையில் காலமானார். இதைத் தொடர்ந்து, அவரது தொகுதி காலியானதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் நாகை தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. இருப்பினும், எம்பி ஒருவர் தனது பதவிக்காலத்தில் காலமாகும்பட்சத்தில், அத்தொகுதியை அதிகாரப்பூர்வமாக காலியானது என அறிவிப்பது மக்களவை செயலகத்தின் கடமையாகும்.

Similar News

News September 13, 2025

2026-ல் நேபாளத்தில் தேர்தல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

image

நேபாளத்தின் இடைக்கால PM ஆக சுசிலா கார்கி நேற்று பொறுப்பேற்றார். இந்நிலையில் நாடாளுமன்றத்துக்கான அடுத்த தேர்தல் 2026, மார்ச் 5-ல் நடத்தப்படும் என அதிபர் ஸ்ரீ ராம் சந்திர பெளடல் அறிவித்துள்ளார். முன்னதாக Gen Z தலைமுறையின் போராட்டத்தால் ஷர்மா ஒலி PM பதவியை ராஜினாமா செய்த நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. பிறகு ராணுவம் – Gen Z போராட்டக்காரர்கள் உடனான பேச்சுவார்த்தை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

News September 13, 2025

டிரெண்டிங்கில் Boycott Asia Cup

image

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில் SM-ல் Boycott Asia Cup, Boycott Ind Vs Pak என்ற ஹேஷ்டேக்ஸ் டிரெண்டிங்கில் உள்ளன. பஹல்காம் தாக்குதலை நினைவுகூரும் நெட்டிசன்கள், பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக்கூடாது என்றும் போட்டியை ஒட்டுமொத்த நாடும் புறக்கணிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர். நீங்க மேட்ச் பார்ப்பீங்களா? கமெண்ட் பண்ணுங்க

News September 13, 2025

‘தைராய்டு’ சரியாக இந்த உணவுகளை சாப்பிடுங்க!

image

பெரும்பாலான பெண்களை மட்டுமின்றி ஆண்களையும் தையாய்டு பாதிக்கிறது. இதனை கட்டுப்படுத்த பெரும்பாலானோர் பெரிதும் போராடி வருகின்றனர். தைராய்டு பிரச்னைக்கு மருத்துவம் அவசியம் என்றாலும், அதனை உணவுகள் மூலமாகவும் சரி செய்யலாம். இதனை படிப்படியாக கட்டுப்படுத்த இந்த பதிவில் இருக்கும் உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை உண்ணுங்கள். இவை உங்கள் தைராய்டு பிரச்னையை குறைக்கலாம். நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!