News May 18, 2024
தமிழக பாஜக தலைவராக சரத்குமார் முயற்சி?

தேர்தலுக்கு முன்பு சமத்துவ மக்கள் கட்சியை கலைத்து விட்டு, பாஜகவில் சரத்குமார் இணைந்தார். இதையடுத்து விருதுநகரில் ராதிகா போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியது. இந்நிலையில், தேர்தல் முடிவு வந்து, மீண்டும் பாஜக ஆட்சியமைத்தால், அண்ணாமலை மத்திய அமைச்சராகலாம் என கூறப்படுவதால், தமிழ்நாடு மாநில பாஜக தலைவராகும் முயற்சியில் சரத் ஈடுபட்டு இருப்பதாகவும், மேலிடத்துடன் பேசி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News August 15, 2025
மதச்சார்பின்மை நீடிக்க சுதந்திர தின வாழ்த்துகள்: விஜய்

மதச்சார்பின்மை, சகோதரத்துவம், நல்லிணக்கம் நீடிக்க, அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். நம் தேசத்தின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தன்னலமற்ற தலைவர்கள், தியாகிகள் மற்றும் வீரர்களின் தியாகத்தைப் போற்றி வணங்குவோம் எனவும் தனது X தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக <<17409232>>CM ஸ்டாலின்<<>>, EPS உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
News August 15, 2025
குறைபாடு திறமையில் இல்லை.. சாதனை மங்கை துளசிமதி

இடதுகையின் பிறவிக் குறைபாட்டால் கட்டை விரலை இழந்தார் அந்தப் பெண். எதிர்பாரா விபத்தால் இடதுகை இயக்கமே கட்டுக்குள் வந்த நிலையிலும், பக்கபலமாக நின்றார் அவரது தந்தை. தனது விடாமுயற்சியால் ஆசிய பாரா போட்டிகளில் பேட்மிண்டனில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்களையும் வென்று திறமையை நிரூபித்தார். இப்படிப்பட்ட சாதனை மங்கையான துளசிமதி முருகேசனுக்கு TN அரசு ‘கல்பனா சாவ்லா’ விருது வழங்கி கெளரவித்துள்ளது.
News August 15, 2025
இளையராஜா – வைரமுத்து பிரிவுக்கு இதுதான் காரணம்

தனக்கும், தனது அண்ணன் இளையராஜாவுக்கும் ஏற்பட்ட சண்டையால் 10 ஆண்டுகள் பேசாமல் இருந்ததாக கங்கை அமரன் தெரிவித்துள்ளார். பட நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், இந்த காலகட்டத்தில் நுழைந்த வைரமுத்து, இளையராஜா வளர்ந்து வருவதற்கு, தானே காரணம் என பல மேடைகளில் கூறியதாக தெரிவித்தார். இதனை முதலில் நம்பாத ராஜா, பின்னர் ஆதாரப்பூர்வமாக அறிந்ததால் வைரமுத்து – இளையராஜா இடையே விரிசல் ஏற்பட்டதாக கூறினார்.