News May 18, 2024
ரோஹித் ஷர்மாவின் கருத்தை ஏற்கிறேன்: கோலி

இம்பேக்ட் வீரர் விதி குறித்த ரோஹித் ஷர்மாவின் கருத்தை ஏற்றுக்கொள்வதாக விராட் கோலி கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், இந்த விதியால் ஒவ்வொரு பந்தும் 6, 4க்கு செல்லும் என நினைக்கும் அளவிற்கு பவுலர்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்றும், எல்லா அணிகளிலும் பும்ரா, ரஷித் கான் போன்ற பவுலர்கள் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், இந்த விதி குறித்து ஜெய் ஷா மறுபரிசீலனை செய்ய உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
Similar News
News March 6, 2026
இந்த வார ஓடிடி விருந்து

இந்த வாரம் அரை டஜனுக்கும் அதிகமான தமிழ் படங்கள் ஓடிடி தளங்களில் ஸ்ட்ரீமிங் ஆகின்றன *’வித் லவ்’ – மார்ச் 6, நெட்பிளிக்ஸ் *விஜய் சேதுபதியின் ‘காந்தி டாக்ஸ்’ – மார்ச் 6, ஜீ5 *’க்ராணி’ – மார்ச் 6, சன் நெக்ஸ்ட் *’ஜாக்கி’ – மார்ச் 6, அமேசான் பிரைம் *’டியர் ரதி’ – மார்ச், சன் நெக்ஸ்ட் *விமலின் ‘தேசிங்கு ராஜா 2’ – மார்ச் 6, டென்ட் கொட்டா *கார்த்தியின்’வா வாத்தியார்'(தெலுங்கு) – மார்ச் 6, அமேசான் பிரைம்
News March 6, 2026
‘ரஜினி 173’ சிக்னல் கொடுத்த சிபி

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார். ஒன் லைனர் சொல்லி ரஜினியிடம் ஓகே வாங்கியிருந்த சிபி சக்கரவர்த்தி, தற்போது Bounded ஸ்கிரிப்டை எழுதி முடித்துள்ளார். இதையடுத்து, மே மாதத்தில் ஷுட்டிங்கை தொடங்குவதற்கான Pre-Production வேலைகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டுள்ளது. 2027 பொங்கல் ரிலீஸை குறிவைத்துள்ள படக்குழு, விரைவில் முழு Cast & Crew-ஐ அறிவிக்கவுள்ளது.
News March 6, 2026
தாயுமானவர் பொன்மொழிகள்

*நல்ல மனதுக்கு உலகம் நல்லதாகவும், கெட்ட மனதுக்கு உலகம் கெட்டதாகவும் தென்படுகிறது *நல்லெண்ணம் வளர வளர அது நமது உடலில் ஊறியதாக ஆகிவிடுகிறது. பிறகு கெட்ட எண்ணம் என்பதே வருவதில்லை. இது எல்லாவற்றிற்கும் அடிப்படை பழக்கமே *நல்ல எண்ணம் நமக்கு நல்ல நலம் தந்து, வாழ்வினை வளமடையச் செய்கிறது *ஒழுக்கத்தில் நிலைநின்றவர்களுக்கு மன உறுதி அதிகரிக்கிறது. பின்னர் அதுவே ஆத்ம சக்தியாக வடிவம் எடுக்கிறது.


