News May 18, 2024
ஜெயக்குமார் மரணத்தில் புதிய தகவல்

நெல்லை கிழக்கு மாவட்ட காங்., தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஜெயக்குமாரை கொலை செய்யும் அளவிற்கு முன் விரோதம் இல்லை. அவரின் கழுத்தை வேறு யாரும் நெரித்ததற்கான தடயங்களும் இல்லை என பிரேதபரிசோதனை அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. இதனால், அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் அதிகரித்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
Similar News
News March 19, 2026
ரஜினி ரசிகரை களமிறக்குகிறாரா விஜய்?

ரஜினி குறித்த ஆதவ்வின் பேச்சு சர்ச்சையானதை அடுத்து, TVK நிற்கும் தொகுதிகளில் ரஜினி ரசிகர்கள் களமிறங்குவார்கள் என ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி அறிவித்தார். இந்நிலையில், சென்னை துறைமுகம் தொகுதியில் ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் அசோக் என்பவரை களமிறக்க விஜய் முடிவு செய்துள்ளாராம். TVK மீது ரஜினி ரசிகர்கள் கோபத்தில் உள்ள நிலையில், ரஜினி ரசிகரையே விஜய் வேட்பாளராக நிறுத்த திட்டமிடுவது கவனம் பெற்றுள்ளது.
News March 19, 2026
காலம் வேறு… காட்சி வேறு!

இன்று டெல்லி சென்றுள்ள EPS, தன்னை சந்திக்க அமித்ஷா இன்னும் <<19425630>>நேரம் ஒதுக்கவில்லை<<>> என்றார். காலச்சக்கரத்தில் 1998-ஐ ரீவைண்ட் செய்யுங்கள். ஜெயலலிதாவின் ஆதரவு கடிதத்துக்காக வாஜ்பாய் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பல மணிநேரம் காத்துக் கிடந்தனர். இதனால் பதவியேற்பும் தாமதமானது. வாஜ்பாய் தூதராக அதிமுகவின் ஆதரவை கேட்டு போயஸ் கார்டன் வந்த ஜார்ஜ் பெர்னாண்டஸை நீண்டநேரம் காக்கவைத்தே சந்தித்தார் ஜெயலலிதா. வரலாறு!
News March 19, 2026
BREAKING: ரம்ஜான் விடுமுறை.. அறிவித்தது தமிழக அரசு

தமிழகம், புதுச்சேரியில் வரும் 21-ம் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என இரு மாநில அரசுகளின் தலைமை காஜிகளும் அறிவித்துள்ளனர். வழக்கம் போல், இன்று மாலை பிறை தேடும் பணி நடைபெற்றது. இந்நிலையில், இன்று பிறை தென்படாததால் வரும் சனிக்கிழமை ரம்ஜான் கொண்டாடப்படும் என உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


