News May 18, 2024
இந்தியாவில் வலுப்பெறும் ரயில் நெட்வொர்க்

இந்தியாவில் ரயில் நெட்வொர்க் அதிகரித்து வருவதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், நாளொன்றுக்கு 4 கி.மீ. தொலைவிற்கு புதிய ரயில் பாதை அமைக்கப்படுவதாகவும், அடுத்த 10 ஆண்டுகளில் 31,000 கி.மீ. ரயில் பாதைகளை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், கடந்த ஆண்டில் மட்டும் 5,300 கி.மீ. தொலைவிற்கு ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
Similar News
News March 9, 2026
தமிழ்நாட்டின் எதிரி யார் என்று தெரியும்: CM ஸ்டாலின்

வரும் தேர்தல் எப்படி தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்குமான தேர்தலாக இருக்கும் என எதிர்க்கட்சிகள் வைத்த விமர்சனத்துக்கு CM ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். திருச்சி மாநாட்டில் பேசிய அவர், தமிழ் மொழி, தமிழ் பண்பாட்டின் ஒரே எதிரி யார் என்று தங்களுக்கு நன்றாகவே தெரியும் என்றும், அந்த எதிரியை எதிர்க்கும் தெம்பும் திராணியும் திமுகவுக்கு மட்டும்தான் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News March 9, 2026
BIG NEWS: தமிழக தேர்தல் எப்போது? முக்கிய அப்டேட்

தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்.23-ம் தேதி தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15-ம் தேதி CEC அறிவிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. அப்போது, தமிழகத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளது குறித்த அறிவிப்பு வெளியாகுமாம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
News March 9, 2026
குழந்தை பிறந்த பின் வயிற்றை பழைய நிலைக்கு மாற்றணுமா?

பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் பலவிதமான உடல் மாற்றங்களை எதிர்கொள்வர். அதில் பொதுவான பிரச்னை தொப்பை தான். உங்கள் வயிற்றை பழைய நிலைக்கு மாற்ற சில வழிகள் இருக்கிறது. ➤பழங்கள், காய்கறிகள், புரதம் மற்றும் கொழுப்புகள் என சமநிலையான உணவை உட்கொள்வது அவசியம் ➤வயிற்று தசைகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளை செய்யலாம் ➤Stress ஆகாமல் பார்த்துக்கொள்வது அவசியம் ➤போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். SHARE.


