News May 18, 2024
ஸ்வாதி மாலிவாலை தாக்கிய வழக்கில் பிபவ்குமார் கைது

ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவாலை தாக்கிய வழக்கில் கெஜ்ரிவால் உதவியாளர் பிபவ்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர். சற்று நேரத்திற்கு முன்பு, ஸ்வாதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் கெஜ்ரிவால் புகைப்படத்தை நீக்கி, கருப்பு நிறத்தை டி.பி-யாக வைத்த நிலையில், இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தேர்தல் நேரத்தில் கெஜ்ரிவால் நற்பெயரை கெடுக்க பாஜக சதி செய்வதாக AAP குற்றம் சாட்டியுள்ளது.
Similar News
News March 4, 2026
ரேஷன் கார்டுதாரர்களுக்கு.. விஜய் வாக்குறுதி

ரேஷன் அட்டைதாரர்களுக்கான வாக்குறுதிகளை விஜய் அளித்துள்ளார். இதன்படி, 500 ரேஷன் கார்டுக்கு ஒரு ரேஷன் கடை, ரேஷன் கடைகளில் அரிசி தவிர மற்ற பொருட்கள் அனைத்தும் பாக்கெட் செய்து வழங்கப்படும். மேலும், ரேஷன் கடைகளில் பெண்களுக்கு பெண் எடையாளர், ஆண்களுக்கு ஆண் எடையாளர் என நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் அறிவித்துள்ளார். ரேஷன் அட்டைதாரர்களை இலக்காக கொண்ட இந்த வாக்குறுதி பற்றி உங்கள் கருத்து என்ன?
News March 4, 2026
தேமுதிக, நாதகவுக்கு சின்னம் ஒதுக்கியது ECI

தமிழகம், புதுச்சேரியில் போட்டியிட தேமுதிகவுக்கு முரசு சின்னத்தை ஒதுக்கீடு செய்து ECI அறிவித்துள்ளது. தேமுதிகவின் கோரிக்கையை ஏற்றே இந்த சின்னம் வழங்கப்பட்டுள்ளதாக ECI கூறியுள்ளது. இத்தேர்தலில் தேமுதிக குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தை பெற்று, அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உருவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதேபோல், நாதகவுக்கு இரு மாநிலங்களிலும் விவசாயி சின்னம் ஒதுக்கி ECI உத்தரவிட்டுள்ளது.
News March 4, 2026
பைல்ஸ் என காட்டியும் விடுப்பு கிடைக்கவில்லை

லக்னோ ரயில்வே பிரிவு லோகோ பைலட் ஒருவர் பைல்ஸ் சிகிச்சைக்கு பின் ஓய்வுக்காக விடுப்பு கேட்டுள்ளார். மருத்துவ அறிக்கைகளை காட்டியும் உயர் அதிகாரி விடுப்பு தர மறுத்ததால், அவர் கோபத்தில் பேண்ட்டை கழற்றி காட்டியுள்ளார். இறுதியில் தொழிற்சங்க தலைவர்கள் தலையீட்டால் விடுப்பு கிடைத்தது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரி விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


