News May 18, 2024

மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் போஸ்டர்

image

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேரூராட்சிக்குட்பட்டது புடனவயல் கிராமம். இந்த கிராமத்தில் செயல்படுத்தப்படும் சமூக புறக்கணிப்பை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ராமநாதபுரம் மாவட்ட தியாகி இமானுவேல் பேரவை சார்பில் திருவாடானை, தொண்டி பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

Similar News

News March 6, 2026

இராமநாதபுரம்: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். SHARE பண்ணுங்க

News March 6, 2026

ராம்நாடு: தேர்தல் புறக்கணிப்பு சுவரொட்டி ஒட்டிய மக்கள்

image

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட காரங்காடு கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு சுவரொட்டி ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கிராமத்தில் உள்ள மாதா தேவாலய நிலத்தை அளந்து எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். இதற்காக வருவாய்த் துறை தேதி அறிவித்தும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மக்கள் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்தனர்.

News March 6, 2026

பரமக்குடி: முகமூடி கொள்ளையர்கள்; போலீசார் தகவல்

image

பரமக்குடியில் (பிப்.25) அதிகாலை 2 மணியளவில் முகமூடி அணிந்த மூவர் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்தது சிசிடிவியில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பெருமாள் கோயில் பின்புறம் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து சில ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்தனர். தேனி, போடி பகுதியைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது. திருப்புல்லாணியில் திருடப்பட்ட டூவீலர் மீட்கப்பட்ட நிலையில், மர்ம நபர்கள் தப்பினர். போலீசார் தீவிர தேடுதல்.

error: Content is protected !!