News May 18, 2024

3 நாட்கள் இலவச ஒயிலாட்ட பயிற்சி

image

மதுரை அரசு அருங்காட்சியகம் மற்றும் கூடல் கலைக்கூடம் இணைந்து நடத்தும் மூன்று நாட்கள் ஒயிலாட்டம் பயிற்சிப் பட்டறை நடைபெற உள்ளது. 21.05.2024 முதல் 23.05.2024 வரை 3 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் 86083 90844 மற்றும் 94434 54446 ஆகிய அலைபேசி எண்களில் அழைத்து முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News September 12, 2025

எடப்பாடி பழனிசாமி மதுரை வருகை

image

மதுரை திருமங்கலம் தொகுதி அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமாரின் தாயார் மீனாள் அம்பாள் மறைவையொட்டி அவரது திருவுருவப் படத்தை நாளை மறுநாள் (செப்.14) ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு திருமங்கலம் அருகே உள்ள குன்னத்தூர் அம்மா கோயிலில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை அதிமுகவினர் செய்து வருகின்றனர்.

News September 12, 2025

மதுரையில் திருநங்கை திடீர் தற்கொலை..!

image

மதுரை அஹிம்சாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் திருநங்கை இசக்கிமுத்து (எ) தீபிகா 29. இவர் சிறு வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி ஆலங்குளம் பகுதியில் வசித்து வந்துள்ளார். அவ்வப்போது வீட்டிற்கு வந்து செல்லும் இசக்கிமுத்து (எ) தீபிகா நேற்று வீட்டிற்கு வந்தபோது சரிவர யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். அடுத்த சிறிது நேரத்தில் அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.

News September 12, 2025

மதுரை: ரேஷன் கார்டில் பிரச்சனையா?..இது பண்ணுங்க

image

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நாளை (செப்.13) காலை 10 மணி முதல் பகல்1 மணி வரை சிறப்பு ரேஷன் குறைதீர் முகாம் நடக்கும். முகாமில் ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் போன்ற ஏராளமான ரேஷன் சிறப்பு சேவைகள் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நல்ல தகவலை ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!