News May 18, 2024
நாமக்கல்: மிதமான மழைக்கு வாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் வரும் நாள்களில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 93.2 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 69.8 டிகிரியாகவும் காணப்படும். காற்று மேற்கு திசையில் இருந்து மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News October 29, 2025
நாமக்கல்: ரயில்வேயில் 3,058 பணியிடங்கள் APPLY NOW!

நாமக்கல் மக்களே, 2025-ம் ஆண்டுக்கான கமர்சியல் உடன் டிக்கெட் கிளார்க், டைப்பிஸ்ட் போன்ற பணிகளுக்கு 3,058 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு 12th படித்து 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம. மாத சம்பளமாக ரூ.19,900 – ரூ.21,700 வரை வழங்கப்படும்.விருப்பமுள்ளவர்கள் நவ.27ம் தேதிக்குள் https://www.rrbchennai.gov.in/ என்ற
இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர்!
News October 29, 2025
நாமக்கல்லில் கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 535 காசுகளாக இருந்து வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 540 காசுகளாக அதிகரித்து உள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.101-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.110-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை
News October 29, 2025
நாமக்கல்: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் அதற்கு தனிப் பட்டா பெற நிலத்தை பகிர்ந்து தனியாக மாற்ற வேண்டும். பின்னர், 1.கூட்டு பட்டா, 2.விற்பனை சான்றிதழ், 3.நில வரைபடம், 4.சொத்து வரி ரசீது, 5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம். இந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


