News May 18, 2024
காவல்துறைக்கு கலெக்டர் உத்தரவு

மழைக்காலத்தில் காவல் துறையினர் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். இயற்கை இடர்பாடுகள், விபத்துகள் ஏற்படும் போதும் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து பேரிடர் மேலாண்மைப்பிரிவில் உள்ள கட்டுப்பாட்டு மையம் தொலைபேசி எண் 1750-க்கு தொடர்பு கொண்டு உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும் என குமரி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News November 5, 2025
குமரி: கூட்டு பட்டாவை மாற்ற எளிய வழி!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற <
✅கூட்டு பட்டா,
✅விற்பனை சான்றிதழ்,
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது,
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE.
News November 5, 2025
குமரி: அலைபாயுதே பாணியில் ஏமாற்றிய பெண்

ராமன்துறையை சேர்ந்த சஜினும்(35) – முள்ளூர்துறையை சேர்ந்த பிளஸ்சியும்(23) காதலித்து 2023-ல் ரகசியமாக திருமணம் செய்து அதை மறைத்து வாழ்ந்தனர். பெற்றோர் வீட்டில் இருந்த பிளஸ்சியை ரூ.12 லட்சம் செலவு செய்து கத்தாரில் வேலை செய்து சஜின் படிக்க வைத்தார். தற்போது முறைப்படி திருமணம் செய்ய பிளஸ்சி சம்மதிக்காமல் ஏமாற்றியதால் அவர் மீது குழித்துறை கோர்ட்டில் சஜின் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார்.
News November 5, 2025
குமரி: முதன்மை கல்வி அதிகாரி மாற்றம்

குமரி மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரியாக பணியாற்றிய பால தண்டாயுதபாணி, சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி பிரின்ஸ் ஆரோக்கியராஜ் பதவி உயர்வு பெற்று, கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக (C.E.O) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை தமிழக அரசு முதன்மை செயலாளர் அலுவலகம் பிறப்பித்துள்ளது.


