News March 27, 2026
நகைக் கடன் தள்ளுபடி.. வந்தாச்சு UPDATE

அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் நகைக் கடன் தள்ளுபடி வாக்குறுதியை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில், விரைவில் திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாக உள்ளது. இதில், முந்தைய தேர்தலைப் போன்று இம்முறையும் நகைக் கடன் தள்ளுபடி வாக்குறுதி இடம்பெறும் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், கடந்த முறையை போன்று 5 சவரன் வரை தள்ளுபடி அறிவிப்பு வெளியாகுமா என்பது கேள்விக்குறிதான்.
Similar News
News April 9, 2026
அதிமுக + விஜய் கூட்டணி.. பரபரப்பை கிளப்பினார்

அதிமுக, தவெக இடையேயான கூட்டணி பேச்சு தொடர்பாக செங்கோட்டையன் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார். விஜய் ஆதரவுடன் CM-ஆகி ₹5,000 கோடி சம்பாதிக்கலாம் என EPS நினைத்தார். அதற்கு நான் தடையாக இருந்ததால் அவருக்கு என் மீது ஆத்திரம் என அவர் தெரிவித்துள்ளார். முதல்வர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிகளை விட்டுக் கொடுத்ததற்கான பரிசுதான் துரோகி என்ற பட்டம் எனவும் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
News April 9, 2026
மகளிர் இடஒதுக்கீடு மசோதா.. அமைச்சரவை ஒப்புதல்

மகளிர் இடஒதுக்கீடு & தொகுதி மறுவரையறை மசோதாக்களில் முன்மொழியப்பட்ட திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, 2011 சென்சஸ் அடிப்படையில், 2029 முதல் லோக்சபா தொகுதிகள் 543-ல் இருந்து 816-ஆக உயரும். இதில் 33% அதாவது 273 இடங்கள் மகளிருக்கு ஒதுக்கப்படும். ஏப்ரல் 16-ல் தொடங்கும் 3 நாள் சிறப்பு அமர்வில் இம்மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News April 9, 2026
2026 தேர்தல் முடிவை மாற்றுமா தவெக?

தமிழ்நாடு அரசியலில் திமுக, அதிமுக கட்சிகளின் ஆதிக்கம் தான் கடந்த 50 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த இரு துருவ அரசியலை, <<19608397>>தவெகவின்<<>> வருகை மாற்றும் என்கின்றனர் தேர்தல் வியூக வல்லுநர்கள். தவெகவுக்கு 10-20% வாக்குகள் கிடைக்கும் எனப் பல்வேறு கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. அதன் அடிப்படையில் பார்த்தால், 2026 தேர்தலில் எந்த கட்சி ஆட்சியமைக்கும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக தவெக இருக்கும் என்கின்றனர்.


