News May 18, 2024
திருச்சியில் இருந்து ரத்து!

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், காரைக்குடியில் என்ஜினியரிங் பணி நடைபெற உள்ளதால் வரும் 19ம் தேதி 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி திருச்சியில் இருந்த காலை 7.05 மணிக்கு புறப்படும் திருச்சி – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் (வாண்டி என்: 16849), ராமேஸ்வரத்தில் இருந்துமதியம் 2.35 மணிக்கு புறப்படும் ராமேஸ்வரம் – திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் (16850) ஆகியவை ரத்து செய்யப்பட உள்ளன.
Similar News
News March 10, 2026
திருச்சி: ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் திருச்சி மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News March 10, 2026
திருச்சி: பிரதமர் வருகை – ட்ரோன்கள் பறக்க தடை

பாரத பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நாளை 11 ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். இந்நிலையில் பாதுகாப்பு காரணம் கருதி அன்றைய தினம் முழுவதும், திருச்சி மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி ட்ரோன்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News March 10, 2026
திருச்சி: பயணிகள் ரயில் சேவை விரிவாக்கம்

திருச்சி – விருதுநகர் பயணிகள் ரயில் சேவை, வாரம் தோறும் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் அடிப்படையில் தற்போது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த ரயில் சேவை இயங்கும் எனவும், விரைவில் இதற்கான புதிய கால அட்டவணை வெளியிடப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


