News May 18, 2024
இந்த எண்ணெயை பயன்படுத்துவதால் புற்றுநோய்?

உணவுப் பொருள்களை பொறிக்க பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தினால் புற்றுநோய் வர வாய்ப்புள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் எச்சரித்துள்ளது. ஏற்கெனவே பயன்டுத்திய எண்ணெயை மீண்டும் சூடுபடுத்தும்போது அதிலுள்ள கொழுப்புகள் டிரான்ஸ் கொழுப்புகளாக மாறி இதய பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளது. இவற்றை எப்போதாவது பயன்படுத்தினால் பிரச்னை இல்லை, ஆனால் தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளது.
Similar News
News March 7, 2026
₹6,600, ₹7,500.. தமிழக அரசு அறிவிப்பு

ரேஷன்கடை ஊழியர்களுக்கு 15% அடிப்படை ஊதியம், 55% அகவிலைப்படி உயர்வு அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கடைகளில் புதிதாக நியமிக்கப்படும் விற்பனையாளர்களுக்கு ₹7,500, கட்டுனர்களுக்கு <<19309935>>₹6,600 தொகுப்பூதியம்<<>> ஒரு வருடம் வழங்கப்படும். ஓராண்டுக்குப்பின், விற்பனையாளர்களுக்கு ₹39,600, கட்டுனர்களுக்கு ₹35,000 வரை காலமுறை ஊதியம் வழங்கப்படும். மேலும், 3% ஆண்டு ஊதிய உயர்வு தொடர்ந்து வழங்கப்படும்.
News March 7, 2026
விஜய் – சங்கீதா விவாகரத்து.. புதிய ஆதாரம் வெளியானது

விவாகரத்து கேட்டு கோர்ட்டை நாடினால், நீலாங்கரை வீட்டில் வசிக்க முடியாது என வழக்கறிஞர் மூலம் தனக்கு மிரட்டல் வந்ததாக விஜய்யின் <<19319143>>மனைவி சங்கீதா<<>> செங்கல்பட்டு கோர்ட்டில் புதிய வழக்கு தொடுத்துள்ளார். அதில், தனக்கு நீதி கிடைக்கும் வரை நீலாங்கரை வீட்டில் வசிக்க உரிமை உள்ளதாகவும், பாதுகாப்பு வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளார். இதனால், விஜய்யின் விவாகரத்து விவகாரம் நாளுக்கு நாள் பொது விவாதமாக மாறி வருகிறது.
News March 7, 2026
அடுத்தவர் உழைப்பில் குளிர்காயும் திமுக: அதிமுக

சைதை துரைசாமியின் ‘மனிதநேயம்’ பயிற்சி மையத்தில் பயின்று வெற்றிபெற்ற மாணவர்களை ‘நான் முதல்வன்’ திட்டத்தில் வென்றதாக கூறி விளம்பரம் செய்வது வெட்கக்கேடு என அதிமுகவின் பாப்புலர் முத்தையா விமர்சித்துள்ளார். அடுத்தவர் உழைப்பில் குளிர்காயும் திமுக அரசு, விளம்பர அரசியல் செய்வதாக சாடிய அவர், மக்கள் வரிப்பணத்தை செலவழித்து பொய் விளம்பரம் செய்வதை விடுத்து, உண்மையான உழைப்பிற்கு மதிப்பளிக்க வேண்டும் என்றார்.


