News May 18, 2024
பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி

பேருந்துகளின் இலவசப் பயணத்தால் மெட்ரோ ரயில்களில் கூட்டமில்லை என பிரதமர் மோடி புதுப்புரளியை கிளப்பி இருக்கிறார் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதவெறுப்பு பரப்புரை கைகொடுக்காததால், மாநிலங்கள் இடையே மோதலைத் தூண்டும் உத்தியை மோடி கையில் எடுத்துள்ளதாக விமர்சித்த அவர், பாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது. பொய்மை உடைப்பட்டு வெறுப்பு அகலும், இந்தியா வெல்லும் எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 27, 2025
அந்தரங்க வீடியோ.. தமிழகத்தில் பயங்கரம்

புதுமண தம்பதியின் படுக்கை அறையில் ரகசிய வீடியோ பதிவு செய்ததோடு, அந்த வீடியோவை காட்டி பெண்ணை படுக்கைக்கு அழைத்த 20 வயது கொடூர இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சிவகங்கை அருகே இந்த அவலம் அரங்கேறியுள்ளது. இதுபோன்ற கேவலமான செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு உடனடியாக தண்டனை கொடுக்க வேண்டும் என கூறும் சமூக ஆர்வலர்கள், நாமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என எச்சரிக்கின்றனர். மக்களே உஷார்..!
News August 27, 2025
உக்ரைன் – ரஷ்யாவிற்கு பேரழிவு ஏற்படும்: டிரம்ப் எச்சரிக்கை

உக்ரைன் -ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்தி போரை நிறுத்தாவிட்டால் இருநாடுகள் மீதும் பொருளாதார போர் தொடுக்கப்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். இதில் தனக்கு விருப்பம் இல்லை என்றாலும், இது பேரிழப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை செய்தும், புடினும், ஜெலன்ஸ்கியும் அதற்கு பிடிகொடுக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
News August 27, 2025
2 ஆண்டுகளில் HIV-க்கு தடுப்பூசி

HIV தொற்று நோய்க்கான ரஷ்யாவின் Sputnik V தடுப்பூசி இன்னும் 2 ஆண்டுகளில் தயாராகிவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க மரபணு ரீதியில் வடிவமைக்கப்பட்ட தடுப்பூசியாக இருக்கும் எனவும், வைரஸை தடுக்கும் வகையில் உடல் செல்களுக்கு மரபணு வழிகாட்டல்களை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, சில அமெரிக்க மருத்துவ நிறுவனங்களும் தடுப்பூசியை உருவாக்கும் பணியில் மும்முரம் காட்டி வருகின்றன.