News May 18, 2024

கிருஷ்ணகிரி: 40 பேருடன் சென்ற பஸ் விபத்து..!

image

மத்தூரில் நேற்று தனியார் பேருந்து மத்தூர் திருவண்ணாமலை பைபாஸ் மேம்பாலத்தை கடக்கும்போது அரியானாவிலிருந்து லோடு ஏற்றி வந்த லாரி மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் தனியார் பேருந்தில் பயணம் செய்த 40 பயணிகள் எந்த ஒரு காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அந்த விபத்து நடந்த அதே இடத்தில் தினமும் ஒரு டூவீலர் அல்லது கார் ஏதாவது ஒரு விபத்து நடந்து கொண்டே இருக்கிறது.

Similar News

News December 30, 2025

பாரூர் பெரிய ஏரியில் மீன்பாசி குத்தகை – ஆன்லைன் ஏலம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூர் பெரிய ஏரியில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மீன்பாசி குத்தகைக்கான இணையவழி ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஜனவரி 5, 2026 காலை 9:00 மணிக்குள் www.tntenders.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் தெரிவித்துள்ளார். கூடுதல் விவரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தை அணுகலாம்.

News December 30, 2025

கிருஷ்ணகிரி: 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000

image

மத்திய அரசின் மிஷன் வத்சல்யா குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. வருமான சான்றிதழ் இருந்தாலே போதும், இ-சேவை மையத்தில் நேரடியாக அல்லது ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை (04343 238200) தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News December 30, 2025

கிருஷ்ணகிரி: தாசில்தார், VAO லஞ்சம் கேட்டா இத பண்ணுங்க

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாசில்தார், வி.ஏ.ஓ போன்ற அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்யலாம். தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்கத்தின் மாநில கட்டுப்பாட்டு அறை 044-22321090 (அ) கிருஷ்ணகிரி மாவட்ட அலுவகத்தை (04343- 292275) தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். *லஞ்சம் தவிர்க்க தயக்கம் இன்றி புகார் செய்யுங்கள்*. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!