News May 18, 2024

3 மாவட்டங்களில் இன்று அதி கனமழை

image

இன்று தமிழ்நாட்டின் 3 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், குமரி, நெல்லை, திருப்பூர், விருதுநகர், தூத்துக்குடி, மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

Similar News

News August 21, 2025

நாளை வங்கியின் இந்த சேவைகள் வேலை செய்யாது!

image

வாடிக்கையாளர்களுக்கு HDFC வங்கி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நாளை (ஆகஸ்ட் 22) இரவு 11 மணி முதல், ஆகஸ்ட் 23-ம் தேதி காலை 6 மணி வரை வங்கியின் சில சேவைகளில் பாதிப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், Email சேவை, வங்கியின் WhatsApp & SMS சேவைகள் பாதிக்கப்பட்டிருக்கும். அதே நேரத்தில், Net banking, Paytm, Googlepay போன்ற செயலிகளில் பணபரிவர்த்தனை செய்ய முடியும்.

News August 21, 2025

உடல் எடையை குறைக்க உதவும் ‘பாசிப்பயறு அடை’

image

◆உடல் எடை குறைப்பு, செரிமானம் & இதய ஆரோக்கியத்திற்கு இது சிறந்தது.
➥பாசிப்பயிறு & அரிசியை தனித்தனியாக 4- 5 மணி நேரம் ஊற வைக்கவும்.
➥ஊறிய பிறகு, அதில், வெங்காயம், சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை & உப்பு சேர்த்து மாவாக அரைத்து கொள்ளவும்.
➥இந்த மாவை புளிக்க வைக்க வேண்டிய தேவையே கிடையாது. அரைத்ததும் அப்படியே அடை செய்யலாம். SHARE IT.

News August 21, 2025

இன்று விண்வெளி திட்டம் தொடர்பான சிறப்பு விவாதம்

image

ஜூலை 21 அன்று தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், விண்வெளி திட்டம் தொடர்பாக இன்று சிறப்பு விவாதம் நடைபெறவுள்ளது. விண்வெளி நாயகர் சுபான்ஷு சுக்லா, இந்தியாவுக்குச் சொந்தமாக விண்வெளி நிலையம் அமைப்பது தொடர்பாக இதில் விவாதிக்கப்படவுள்ளது. எதிர்க்கட்சிகளின் கடுமையான அமளிகளுக்கு மத்தியில் PM, CM பதவி பறிப்பு மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது.

error: Content is protected !!