News May 18, 2024
நீலகிரியில் சிறப்பு ரயில் சோதனை ஓட்டம்

நீலகிரியில் இயங்கும் யுனெஸ்கோ புகழ், பல்சக்கர ரயிலில் பயணம் செய்ய பல்வேறு தரப்பு மக்களும் ஆர்வம் காட்டி வந்தனர். இதை கருத்தில்கொண்டு வாரத்தில் 4 நாட்கள் ஓடிய சிறப்பு ரயிலை தினமும் விட ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று (மே 17) சோதனை ஓட்டமாக 3 பெட்டிகளுடன் ரன்னிமேடு ரயில் நிலையம் வரை இயக்கப்பட்டது.
Similar News
News August 23, 2025
நீலகிரி: நாளை மறுநாள் மின்தடை அறிவிப்பு!

கோத்தகிரி, கெரடாமட்டம், ஒன்னட்டி, துணை மின் நிலையங்களில் (ஆக.25) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. கோத்தகிரி, கப்பட்டி, உல்லத்தி, கேர்பென், குண்டாடா, ஓரசோலை, தட்டப்பள்ளம், குஞ்சப் பனை, கொணவக்கரை, தேனாடு, திம்பட்டி, கரிக்கையூர், கோயில்மட்டம், குல்லங்கரை, செம்மனாரை, கெரடாமட்டம், கோடநாடு, ஈளாடா, தேனாடு, ஓன்னட்டி, மஞ்சமலை, கரிக்கையூர், ஆகிய பகுதிகளில் இருக்காது. ஷேர் பண்ணுங்க!
News August 23, 2025
நீலகிரி: வாழை தோட்டத்தை சேதம் செய்த காட்டு யானைகள்!

புளியம்பாறை பகுதி விவசாயிகள், ஓணம் பண்டிகைக்கு முன், வாழை தார்கள் அறுவடை செய்ய உள்ளனர். காட்டு யானைகள், நுழைவதை தடுக்க தோட்டத்தை சுற்றி சோலார் மின்வேலி அமைத்துள்ளனர். இந்நிலையில், அப்பகுதியில் முகாமிட்ட காட்டு இரண்டு யானைகள், வாழை மரத்தை ஒன்றை, சோலார் மின் வேலி மீது சாய்த்து, மின் சப்ளை துண்டிக்கப்பட்வுடன், கம்பியை லாவகமாக கடந்து, தோட்டத்தில் நுழைந்து,வாழை மரங்களை சேதம் உட்கொண்டு சென்றுள்ளன.
News August 23, 2025
உப்பட்டி தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை

பந்தலூர் உப்பட்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. 8ஆம் மற்றும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் ஓராண்டு அல்லது இரண்டாண்டு பயிற்சி பிரிவுகளில் சேரலாம். பயிற்சி முடித்ததும் உடனடியாக வேலை வாய்ப்பு பெறப்படும் என முதல்வர் தெரிவித்தார்.