News March 27, 2026
தொகுதி பங்கீட்டை நிறைவு செய்தது திமுக!

பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின், கூட்டணியில் உள்ள பெரிய கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டை திமுக இறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து, சிறிய கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டையும் திமுக நிறைவு செய்துள்ளது. அதன்படி, கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை, மனிதநேய ஜனநாயக கட்சி, எஸ்டிபிஐ, தமிழர் தேசம் கட்சிக்கு தலா 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 4 கட்சிகளும் உதய சூரியன் சின்னத்தில் களமிறங்குவதாக அறிவித்துள்ளன.
Similar News
News April 7, 2026
IPL: டெல்லி அணிக்கு அதிர்ச்சி.. அவர் இல்லாம எப்படி?

DC-ன் பந்துவீச்சாளர் ஸ்டார்க் மேலும் 3 போட்டிகளில் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது. தோள்பட்டை, முழங்கை பிரச்னைகளால் அவர் அவதிப்படுகிறார். இதனால், ஆஸி வாரியம் அனுமதித்தால் மட்டுமே, ஏப்.21-ல் SRH அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவார் என கிரிக்கெட் வட்டாரத்தினர் கூறுகின்றனர். இதனால் நடப்பு IPL-ல் இதுவரை தோல்வியை சந்திக்காத DC-க்கு பின்னடைவு ஏற்படுமோ என ரசிகர்கள் வருந்துகின்றனர்.
News April 7, 2026
விஜய்யை தவிர எவராலும் இதை கூறமுடியவில்லை: KAS

பாஜகவுக்கு ஓட்டு போடுவது NOTA-வுக்கு வாக்கு செலுத்துவதற்கு சமம் என செங்கோட்டையன் விமர்சித்துள்ளார். திமுகவை வீழ்த்த பாஜகவால் முடியவில்லை என்ற அவர், ஊழலற்ற ஆட்சியை நடத்தப்போகிறோம் என விஜய்யை தவிர வேறு எவராலும் சொல்லமுடியவில்லை எனவும் பேசியுள்ளார். மேலும், தவெக 234 தொகுதிகளில் வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை இல்லை எனவும் தெரிவித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News April 7, 2026
தங்கம் விலை மீண்டும் மளமளவென குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கண்ணாமூச்சி ஆட்டம் ஆடி வருகிறது. காலையில் சரிந்து மீண்டும் உயர்வைக் கண்ட தங்கம், தற்போது 1 அவுன்ஸ்(28g) $30 குறைந்து $4,634-க்கு விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளி விலை 1 அவுன்ஸ் $1 குறைந்து $72-க்கு விற்பனையாகிறது. இந்திய பங்குச்சந்தைகள் நிலையாக இருப்பதால் முதலீட்டாளர்களின் கவனம் அங்கு திரும்பியுள்ளது. இதே நிலை நீடித்தால் தங்கம் விலை மீண்டும் குறைய வாய்ப்புள்ளது.


