News May 17, 2024

அரசு மாதிரி பள்ளியை ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்

image

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் அரசு மாதிரி பள்ளி அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, மாவட்ட கல்வி அலுவலர் ஜெய்சங்கர், மேற்கு மண்டல உதவி ஆணையர் சந்தியா, உதவி செயற்பொறியாளர் சவிதா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Similar News

News August 21, 2025

TNAU துணை இணையவழி விண்ணப்பம் தொடக்கம்

image

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் உள்ளிட்ட பட்டயப் படிப்புகளுக்கான துணை இணையவழி விண்ணப்பங்கள் இன்று (21.08.2025) முதல் 29.08.2025 வரை பெறப்படுகின்றன. மேல்நிலை தேர்ச்சி பெற்றவர்கள் http://tnau.ucanapply.com என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே தரவரிசைப்பட்டியலில் இடம் பெறுவோர் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியதில்லை என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

News August 21, 2025

2300 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை.!

image

கோவை மாவட்டத்தில் 2300 க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளில் பிரதிஷ்டை செய்ய போலீசார் அனுமதி அளித்துள்ளார்கள். நாடு முழுவதும் வருகிற 27ஆம் தேதி அன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. புறநகரில் உள்ள 1600க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News August 21, 2025

கோவையில் தமிழ் தெரிந்தால் ரூ.50,000 சம்பளத்தில் வேலை!

image

கோவை மண்டலப் புள்ளியியல் இணை இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள நிரந்த முழு நேர காவலர் பணியிடம் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 8 வது தேர்ச்சி (ம) தமிழ் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும். <>இந்த லிங்கை க்ளிக்<<>> செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். மேலும் விபரங்களுக்கு https://coimbatore.nic.in/ என்ற இணையதளம் மூலம் அறியலாம். (SHAREit)

error: Content is protected !!