News May 17, 2024

ஜூன் 7 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

image

நீலகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
நீலகிரியில் உள்ள அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ.களில் 2024ம் ஆண்டிற்கான சேர்க்கைக்கு வரும் ஜூன் 7ம் தேதி வரை 14 வயது பூர்த்தி அடைந்த ஆண்கள் மற்றும் பெண்கள் www.skiltraining.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆண்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 40, பெண்களுக்கு வயது வரம்பு இல்லை
என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News

News March 8, 2026

நீலகிரி மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!

image

குன்னூர் – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கோழிக்கரை, கேஎன்ஆர் பகுதிகளில் இரண்டு குட்டிகளுடன் ஒன்பது யானைகள் மூன்று நாட்களாக சுற்றி வருகின்றன. எனவே குன்னூர் வனச்சரகர் ரவீந்தர நாத் தலைமையில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பொது மக்கள் வாகனங்களை கவனமுடன் இயக்கிச் செல்லுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News March 8, 2026

நீலகிரி கலெக்டர் வேண்டுகோள்!

image

பந்தலூர் அருகே தாளூர் பகுதி தமிழக – கேரளா மாநில எல்லையில் கேரளம் நெடுஞ்சாலை துறையினர் மலையாள மொழியின் வரவேற்பு பலகையை பிரச்சினைக்குரிய இடத்தில் வைத்தனர். இதனால் அரசியல் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா செய்தியாளா்களிடம் கூறுகையில், இவ்விவகாரம் தொடா்பாக வயநாடு ஆட்சியரிடம் பேசியுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என கூறியுள்ளார்.

News March 8, 2026

கூடலூர்: செக்ஷன் 17 நில பிரச்சினை – ஆட்சியரிடம் MLA மனு

image

கூடலூரில் செக்ஷன் 17 நில பிரச்சினை தொடர்பாக போராட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன். ஜெயசீலன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார். இந்நிகழ்வில் அதிமுக நகர செயலாளர் அனுப்கான், ஒன்றிய செயலாளர் செல்வகுமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

error: Content is protected !!