News May 17, 2024
பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருக்கலாம்.. ஆனால்!!

பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருப்பதை நினைவில் கொள்ளவேண்டும் என காங்., தலைவர் மணிசங்கர் ஐயர் பேசியது சர்ச்சையானது. உ.பி., தேர்தல் பிரசாரத்தில் அதற்கு பதிலளித்துள்ள மோடி, பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருந்தாலும், அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அவர்களுக்கு தெரியாது என்றும், அதை முறையாக பராமரிக்கக் கூட அவர்களிடம் பணம் இல்லை என்பதை காங்கிரஸ் உணர வேண்டும் எனவும் பதிலளித்துள்ளார்.
Similar News
News January 25, 2026
தேர்தல் அல்ல; ஜனநாயகப் போர்: விஜய்

பூத் என்றாலே கள்ள ஓட்டுப் போடும் இடம் என திமுக, அதிமுகவினர் நினைப்பதாக விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார். தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், வரும் சட்டமன்றத் தேர்தல், TN மக்களுக்கு வெறும் தேர்தல் மட்டுமல்ல ஜனநாயகப் போர் என ஆவேசமாக கூறினார். மேலும், ஆளும் கட்சி, ஏற்கெனவே ஆண்ட கட்சிக்கு மாற்றாக தவெகவை அரியணையில் அமர்த்த மக்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். உங்கள் கருத்து என்ன?
News January 25, 2026
செங்கோட்டையனுக்கு நெருக்கடி

அதிமுக கூட்டணியில் TTV இணைந்த நிலையில், இதைத்தான் EPS-யிடம் அப்போவே செய்யச் சொன்னேன்; ஆனால் என்னை வெளியே அனுப்பி அனுப்பிவிட்டாரே என்று செங்கோட்டையன் புலம்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் தவெகவில் இணைந்து சில மாதங்கள் ஆகியும் பொறுப்பு வழங்காததால், KAS-ஐ நம்பி வந்தவர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது, KAS-க்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாம்.
News January 25, 2026
தவெகவுக்கு 40% ஓட்டு: CTR நிர்மல்குமார்

ஆளுங்கட்சியின் குற்றங்களை தேர்தல் அன்று விசில் ஊதி மக்கள் வெளிப்படுத்த தயாராகி வருவதாக CTR நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். அக்கட்சியின் செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், TN-ல் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் தவெகவுக்கு ஒரு வாக்கு இருப்பதாகவும், அண்மையில் திமுகவுக்கு தேர்தல் வேலை செய்யும் நபர் ஒருவர், தவெகவுக்கு 40% வாக்குகள் கிடைக்கும் என தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்தார்.


