News March 25, 2026

ஸ்டாலின் வந்தாரு, நீச்சலடிக்க விட்டாரு: EPS

image

2021-ல் கொடுத்த 500+ வாக்குறுதிகளில் 4-ல் ஒரு பங்கை கூட திமுக நிறைவேற்றவில்லை என EPS விமர்சித்துள்ளார். கல்விக் கடன் ரத்து, நீட் ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகளை கொடுத்து மக்களை CM ஸ்டாலின் ஏமாற்றிவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும், ‘ஸ்டாலின் வந்தாரு, மழைக்காலத்தில் நீச்சலடிக்க விட்டாரு’ என சாடிய EPS, சென்னையில் வடிகால் பணிகளை திமுக அரசு முடிக்காததால் மக்கள் சிரமப்படுவதாகவும் கூறினார். <<-se>>#TNElection2026<<>>

Similar News

News April 10, 2026

நெஞ்சு சளி நீங்க இந்த கசாயத்தை குடிங்க!

image

➤தேவை: கற்பூரவள்ளி, துளசி, வெற்றிலை, இஞ்சி, மிளகு, சீரகம் ➤செய்முறை: வெந்நீரில் தலா 5 கற்பூரவள்ளி & துளசி இலைகளை சேர்க்கவும். பின்னர், வெற்றிலையின் நரம்பை காம்போ நீக்கிவிட்டு அதனுடன் சேர்க்கவும். மிளகு, இஞ்சி, சீரகத்தை இடித்து சேர்க்கவும். ஒன்றரை கிளாஸ் தண்ணீர் 1 கிளாஸ் அளவிற்கு வரும் வரை நன்கு கொதிக்கவிட்டு, அடுப்பை அணைத்து வடிகட்டி ஆறவைத்து குடிக்கலாம் என சித்தா டாக்டர்கள் சொல்கின்றனர். SHARE.

News April 10, 2026

விஜய்யுடன் காங்கிரஸ்.. ஒரேநாளில் மாறியது

image

உண்மையான காங்., தவெக பக்கம் உள்ளது என விஜய் நேற்று முன்தினம் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இதனை தமிழக காங்., மறுத்துள்ளது. குறிப்பாக, விஜய்யுடன் காங்., இல்லை; திமுகவுடன் தான் கட்சி உள்ளது என நேற்று கர்நாடக DCM <<19608310>>சிவகுமார்<<>> வெளிப்படையாக கூறியிருந்தார். விஜய் கூறியதற்கு காங்., தேசியத் தலைவர்களும் மறுப்பு தெரிவித்து, ஒரேநாளில் விஜய்யின் கருத்தை மாற்றி தெளிவுபடுத்தியுள்ளனர்.

News April 10, 2026

இரண்டு கட்சிகளுக்கு ஒரே சின்னம்

image

தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், 2 அரசியல் கட்சிகளுக்கு ஒரே சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் தனித்து போட்டியிடும் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகத்திற்கும், 30 தொகுதிகளில் போட்டியிடும் ராமதாசுக்கும் (PMK) சிலிண்டர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இருதரப்பும் போட்டியிடாத மற்ற தொகுதிகளில் இச்சின்னம் சுயேச்சைகளுக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!