News May 17, 2024
திருவண்ணாமலைக்கு 85 பேருந்துகள் இயக்கம்

திருவண்ணாமலை பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்து இயக்க கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, 23 ஆம் தேதி முதல் கோயம்பேட்டில் இருந்து ஆற்காடு, ஆரணி வழியாக 44 பேருந்துகள், தினசரி காஞ்சிபுரம், வந்தவாசி வழியாக இயக்கப்படும் 11 பேருந்துகளுடன் கூடுதலாக 30 பேருந்துகள் என மொத்தம் 85 பேருந்துகள் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு இயக்கப்பட உள்ளது.
Similar News
News January 24, 2026
சென்னையில் இனி குடிநீர் பிரச்னைக்கு ஈஸியான தீர்வு!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் தொடர்பான புகார்களை எளிதில் பதிவு செய்ய “சென்னை குடிநீர்” (Chennai Metro Water) கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்செயலியில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு அல்லது கழிவுநீர் கசிவு குறித்த புகார்களை உடனுக்குடன் தெரிவிக்க முடியும். ஷேர் செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க.
News January 24, 2026
சென்னையில் தலையில் கல்லைப்போட்டு கொலை

பெரும்பாக்கம், எழில்நகர் எஸ்.பிளாக்கை சேர்ந்த கார்த்திக் (25) பூங்காவில் பிணமாக கிடந்துள்ளார். போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்ததில், குமார்(27), விஜயகுமார்(28), சரத் என்ற சரத்குமார்(35), சரண்ராஜ்(29), மற்றொரு கார்த்திக்(26) ஆகியோர் பார்க்கில் குடிபோதையில் சண்டையிட்டு தலையில் கல்லைத்தூக்கி போட்டு கொலை செய்தது கொலை செய்தது தெரியவந்தது. மது அருந்த பணம் கொடுக்காததால் இந்த கொடூரம் அரங்கேற்றியுள்ளது.
News January 24, 2026
சென்னை: மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் மணி யாதவ் (34). இவர் நேற்று முன்தினம் மாலை மந்தைவெளி கோழிப்பண்ணை மைதானம் அருகே நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது இறந்தார். பட்டினப்பாக்கம் போலீசார் இது தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.


