News May 17, 2024

இந்த நேரத்தில் டிக்கெட் பரிசோதகர் சோதிக்க முடியாது

image

முன்பதிவு ரயில்களில் மோசடி நடைபெறுவதை தடுக்க பயணிகளிடம் டிக்கெட் உள்ளதா என்பதை சோதிக்க டிக்கெட் பரிசோதகருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவரும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே டிக்கெட் சோதனையை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்குப் பிறகு, சோதனை நடத்த அவருக்கு ரயில்வே விதி அனுமதி தரவில்லை. அதற்கு முன்பே நடத்திவிட வேண்டுமென்று ரயில்வே விதியில் கூறப்பட்டுள்ளது.

Similar News

News October 16, 2025

10 வருடத்தில் இதுவே முதல்முறை..

image

தமிழ் சினிமாவில் குறைந்தது ஒரு டாப் நடிகரின் படமாவது தீபாவளிக்கு ரிலீசாகும். ஆனால், 10 ஆண்டுகளில் இல்லாத நிலையாக, இந்த ஆண்டுதான் இளம் ஹீரோக்களின் படங்கள் மட்டுமே ரிலீஸாகின்றன. *2015- வேதாளம், தூங்காவனம் *2016- கொடி, காஷ்மோரா *2017- மெர்சல் *2018- சர்கார் *2019- பிகில், கைதி *2020- சூரரை போற்று(OTT) *2021- அண்ணாத்த *2022- சர்தார், பிரின்ஸ் *2023- ஜிகர்தண்டா டபுள் X, ஜப்பான் *2024- அமரன்.

News October 16, 2025

முன்னாள் ராணுவ வீரர்களின் பெண் திருமணத்திற்கு ₹1,00,000!

image

பென்ஷன் பெற தகுதியில்லாத முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான மானியத்தை 100% அதிகரிக்க மத்திய பாதுகாப்புத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, மாதாந்திர மானியம் ₹4,000-ல் இருந்து ₹8,000-மாகவும், கல்வி மானியம் ₹1,000-ல் இருந்து ₹2,000-மாகவும், திருமண மானியம் ₹50,000-ல் இருந்து ₹1,00,000-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இவ்விதிகள் வரும் நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகின்றன.

News October 16, 2025

மூட்டு வலியை விரட்டும் கசாயம்!

image

கை, கால், கழுத்து & மூட்டு வலி நீங்க சித்தரத்தை கசாயம் பருகும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதனை செய்ய, சித்தரத்தை சூரணம்- அரை தேக்கரண்டி, சீந்தில் கொடி சூரணம்- அரை தேக்கரண்டி, சுக்கு பொடி- அரை தேக்கரண்டி தேவை. இவை மூன்றையும் 200மிலி நீரில் 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து, வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து பருகலாம். இந்த பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!