News March 25, 2026
போர்.. இந்தியாவுக்கு மகிழ்ச்சி செய்தி

மேற்காசிய போர் பதற்றத்துக்கு இடையே, ரஷ்யாவிலிருந்து 60 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெயை, இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் வாங்கியுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கெனவே ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான தடையினை US தற்காலிகமாக நீக்கியுள்ளது. இதனால் தட்டுப்பாடின்றி பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் கிடைக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News April 5, 2026
காமராஜரை கொலை செய்ய முயன்றனர்: ஸ்டாலின் பரபரப்பு

காமராஜரை டெல்லியில் உள்ள வீட்டில் வைத்து சங்கிக் கூட்டம் கொலை செய்ய முயன்றதாக ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். விருதுநகர் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், காமராஜர் மறைவின் போது அவரது மகன் போல் நின்று இறுதி மரியாதை செலுத்தியவர் கருணாநிதி எனவும் கூறியுள்ளார். முன்னதாக, காமராஜர் மறைந்த பிறகு அவருக்கு மெரினாவில் இடம் கொடுக்க திமுக மறுத்துவிட்டதாக EPS கூறியிருந்தார். <<-se>>#TNElection2026<<>>
News April 5, 2026
தேர்தலில் இருந்து பின் வாங்க இதுதான் காரணம்: திருமா

தேர்தலில் இருந்து பின்வாங்கியது குறித்து திருமா மீண்டும் விளக்கமளித்துள்ளார். இத்தேர்தலில் போட்டியிட்டு சட்டசபைக்கு செல்வது, என்னுடைய நோக்கத்திற்கு பயன் தரும்; விளிம்பு நிலை மக்களுக்கான பிரச்னையை பேச முடியும் என நம்பினேன். அதன் அடிப்படையில் நான் போட்டியிட முடிவு எடுத்தேன். ஆனால், எங்கள் கூட்டணி நலனுக்கு எதிராக அவதூறு பரப்பப்பட்டதால் எனது முடிவை மாற்றிக் கொண்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.
News April 5, 2026
இந்த 4 வீரர்களை இறக்குங்கப்பா CSK..

RCB-க்கு எதிரான இன்றைய போட்டியில் சிறந்த பிளேயிங் 11 உடன் CSK களமிறங்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். குறிப்பாக, சரியான ஆர்டரில் வீரர்களை இறக்கினால் அணி நிச்சயமாக ஜெயிக்கும் என ரசிகர்கள் நம்புகின்றனர். அதாவது, டெவால்ட் பிரேவிஸ் & உர்வில் படேலை மிடில் ஆர்டரிலும், அகீல் ஹொசைனை பவர்பிளேவிலும் ஓவர்டனை ஃபினிஷிங்கிலும் களமிறக்க சென்னை ரசிகர்கள் SM-களில் கோரி வருகின்றனர். உங்கள் கருத்து?


