News May 17, 2024

39% வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்

image

நாடு முழுவதும் நான்கு கட்டத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், அடுத்த 3 கட்ட வாக்குப்பதிவுகள் மே 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில், மே 25இல் நடைபெறும் ஆறாவது கட்டத் தேர்தலில், மொத்தம் 866 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 338 பேர் (39%) கோடீஸ்வரர்கள் என்பது அவர்களது வேட்புமனு மூலமாக தெரிய வந்துள்ளது. அவர்களின் சராசரி சொத்து மதிப்பு ₹6.21 கோடியாக உள்ளது.

Similar News

News August 22, 2025

திமுகவுக்கு தாவிய தவெக நிர்வாகிகள்.. விஜய் அதிர்ச்சி

image

கரூரில் தவெக முக்கிய நிர்வாகிகள் சிலர் திமுகவுக்கு தாவியுள்ளனர். செந்தில் பாலாஜி முன்னிலையில், TVK ஒன்றிய செயலாளர் சீனிவாசன், ஒன்றிய துணை செயலாளர் லோகநாதன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் திமுகவில் தங்களை இணைத்து கொண்டனர். அதிமுக, பாஜகவினரை குறிவைத்து திமுகவில் சேர்த்து வந்த Ex அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது தவெகவினரையும் டார்கெட் செய்து வருவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

News August 22, 2025

ஒருபுறம் உயர்வு.. மறுபுறம் சரிவு!

image

GST வரிவிதிப்பு சீர்திருத்தம், ரஷ்யா, உக்ரைன் அதிபர்களுடன் USA அதிபர் பேச்சு வார்த்தை உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 82,000 புள்ளிகளை தொட்டுள்ளது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 25,083 புள்ளிகளில் உள்ளது. ஆனாலும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 18 காசுகள் சரிந்து ₹87.25 ஆக உள்ளது.

News August 22, 2025

பாஜக முதல்வர்களையே பதவி நீக்கலாம்: பெ.சண்முகம்

image

PM, CM பதவி பறிப்பு மசோதாவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் பெருகி வருகின்றன. அந்த வகையில், இந்த மசோதா மூலம் PM மோடி, அமித்ஷா ஆகியோருக்கு பிடிக்காத BJP முதல்வர்களைக் கூட பதவியில் இருந்து நீக்கும் வாய்ப்புள்ளதாக பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது என்பதற்காக தாங்கள் நினைப்பதை சட்டமாக உருவாக்குவதை ஜனநாயக நாட்டில் அனுமதிக்க முடியாது என்றார்.

error: Content is protected !!