News March 25, 2026
தொகுதி மாறும் நயினார், வானதி

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் பட்டியலில், நயினார் வெற்றிபெற்ற நெல்லை, வானதி வெற்றிபெற்ற கோவை தெற்கு இடம்பெறவில்லை. இதனால், சாத்தூர் தொகுதியில் நயினார், கோவை வடக்கில் வானதி, விளவங்கோடு தொகுதியில் விஜயதரணி போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், அண்ணாமலை போட்டியிட விரும்பிய சிங்காநல்லூர் உள்ளிட்ட தொகுதிகளை அதிமுக வழங்கவில்லை. <<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 8, 2026
ஸ்டாலின் தான் EPS-யிடம் கைக்கட்டி கெஞ்சினார்: காயத்ரி

உதயநிதிக்கு அரசியல் என்றால் என்னவென்றே தெரியாது என காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார். திண்டிவனத்தில் பேசிய அவர், உதயநிதி தனது பிரசாரத்தில் சசிகலா காலில் EPS விழுந்த மாதிரி ஒரு போட்டோ காண்பிக்கிறார். ஆனால் அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் எத்தனை பேர் காலில் விழுந்தார்கள் தெரியுமா என கேள்வி எழுப்பினார். ஸ்டாலின்தான் மெரினாவில் ஒரு இடத்துக்காக EPS-யிடம் கைகட்டி கெஞ்சி கேட்டார் எனவும் சாடியுள்ளார்.
News April 8, 2026
ஏப்ரல் 8: வரலாற்றில் இன்று

▶1950 – இந்தியாவும் பாகிஸ்தானும் லியாக்கத்-நேரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ▶1970 – இஸ்ரேல் விமானங்கள் எகிப்தியப் பள்ளிக்கூடம் ஒன்றில் குண்டுகளை வீசி 46 குழந்தைளை படுகொலை செய்தது. ▶1917 – தமிழக கர்நாடக வீணை கலைஞர் எஸ். இராமநாதன் பிறந்தநாள் ▶1894 – கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி நினைவுதினம். ▶2015 – தமிழக எழுத்தாளர் ஜெயகாந்தன் நினைவுதினம்.
News April 8, 2026
போர் பீதியால் வளைகுடா நாடுகளில் எச்சரிக்கை!

அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் பீதியால் வளைகுடா நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. அதன்படி குவைத் தனது மக்களை 6 மணி நேரம் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. பஹ்ரைன் அரசு, மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு கோரியுள்ளது. கத்தாரில் அச்சுறுத்தல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இந்தியத் தூதரகமும் வலியுறுத்தியுள்ளது.


