News May 17, 2024
அடிப்படை வசதியின்றி சிவகங்கை ரயில்வே நிலையம்

சிவகங்கை மாவட்ட தலைநகரான இங்கிருந்து தான் காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, மானாமதுரைக்கு அதிகளவில் பயணிகள் வந்து செல்கின்றனர். பயணிகள் வருகைக்கு ஏற்ப அடிப்படை வசதிகளை ரயில்வே நிர்வாகம் செய்து தரவில்லை. ரயில் நிலையத்தில் பின்னால் தனியார் பங்களிப்புடன் அமைத்த நவீன கழிப்பறை செயல்பாடின்றி முடங்கி கிடக்கிறது. நடவடிக்கை எடுக்க ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News December 8, 2025
சிவகங்கை: கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி.!

தேவகோட்டை அருகே உள்ள விஜயாபுரம் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து சருகனி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக காரில் வந்த மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், காளிமுத்துவின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் காளிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருவேகம்பத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News December 8, 2025
சிவகங்கை: மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடனுதவி!

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <
News December 8, 2025
சிவகங்கை: பூட்டிய வீட்டில் 3 பவுன் நகை கொள்ளை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே கண்டவராயன்பட்டியைச் சேர்ந்த சாத்தப்பன் குடும்பத்துடன் கோயம்புத்தூரில் வசித்து வருகிறார். திருக்கார்த்திகைக்காக ஊருக்கு வந்து தீபம் ஏற்றிய பின் மீண்டும் கோயம்புத்தூருக்கு சென்ற நிலையில், அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 3 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளதைக் கண்டறிந்தனர். இது குறித்து கண்டவராயன்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


